இனி விளையாடிக் கொண்டே வேலை தேடலாம்!

டிரெண்டிங்

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான லிங்க்ட்இன் பிரபல தொழில்முறை நெட்வொர்க்கிங் நிறுவனமாக அனைவராலும் அறியப்பட்டதுதான்.

இந்த தளத்தில் புதிதாக படித்து முடித்தவர்கள் தங்களுக்கான வேலைகளை கண்டறியவும், நிறுவனங்கள் தங்களின் காலியிடங்களை நிரப்ப சரியான ஆட்களை தேர்ந்தெடுக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

உலக அளவில் 100 கோடி பயனாளர்களைக் கொண்ட லிங்க்ட்இன் நெட்வொர்க்கிங் தளம் தற்போது புதிய முயற்சியாக கேம்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர் நிமா ஓவ்ஜி லிங்க்ட்இன்னின் கேமிங் பற்றிய கருத்து தெரிவிக்கையில், “கேமிங்கில் தனித்துவமான அம்சத்தைக் கொண்டுவர லிங்க்ட்இன் முயற்சித்து வருகிறது.  கேம் விளையாடுபவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் அந்தந்த நிறுவனங்கள் தரவரிசையில் இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளார்

லிங்க்ட்இன் ஆனது தனது பயனாளர்களை இன்னும் ஆக்டிவ் ஆக வைத்துக் கொள்ளும் நோக்கில் puzzle போன்ற கேம்களைக் கொண்டுவர உள்ளது. இதில் குயின்ஸ், இன்ஃபெரன்ஸ், கிராஸ் கிளைம்ப் ஆகிய மூன்று புதிர் விளையாட்டுகளை உருவாக்கியுள்ளது.

தற்போது சோதனையில் இருக்கும் இந்த கேமிங் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

2019 ஆம் ஆண்டு முதல் லின்க்ட்இன் இந்தியாவின் தலைமைப் பதவி வகித்துவந்த அஷ்தோஷ் குப்தா ஏப்ரல் மாத இறுதியில் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் பெறுப்பேற்றது முதல் லின்க்ட்இன்னை வர்த்கம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பவித்ரா பலராமன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மாம்பழம் இனிக்குமா? புளிக்குமா? – அப்டேட் குமாரு

கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மோடி அஞ்சலி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0