நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன்…
நாடாளுமன்ற தேர்தல் பத்தி நண்பரோட பேசிக்கிட்டு இருந்தப்போ, “பாமக இன்னும் அதிமுக, பாஜகன்னு ரெண்டு கட்சிக்கும் புடி கொடுக்க மாட்டுக்குதே…நேத்து பாஜகவோட கூட்டணின்னு சொன்னாங்க, இன்னைக்கு காலையில அதிமுகன்னு சொன்னாங்க, இப்போ சாயந்தரம் மறுபடியும் பாஜகன்னு சொல்றாங்க…எங்க தான் போகப்போறாங்களோ” சொன்னாப்ல…
அதுக்கு நான், “அதெல்லாம் விடுனே… இந்த பரபரப்புலேயும் நம்ம பாமக ஜி.கே.மணி, மாம்பழம் சுவைக்க அறுவடை காலம் மிக விரைவில்னு இன்னைக்கு காலையில ஒரு ட்வீட் போட்ருக்காப்ல… ஆனா, இந்த மாம்பழம் புளிக்குமா இனிக்குமானே தெரியலையனே…ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு டேஸ்ட் இருக்குனு” சொன்னேன்…
அவரும் “ஆமாமா…இந்த சீசன்ல என்ன டேஸ்ட்னு நாளைக்கு தெரிஞ்சுரும்னு” சொன்னாப்ல…
அப்புறம் டீயை குடிச்சிட்டு நாங்க கிளம்பிட்டோம்
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
வசந்த்
பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது பாமக..
அன்புமணி ~இப்பெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது ’பாரத் மாதா கி ஜே’ சொல்லலான தூக்கமே வரமாட்டக்கு.
ச ப் பா ணி
பாஜக வும் பாமகவும் ஒன்னு..
இதை அறியாத அதிமுகவுக்கு பன்னு
ச ப் பா ணி
வயித்துவலிக்கு அப்புறம் அதிகம் சொல்லப்பட்ட பொய்களில் ஒன்று
‘மீட்டிங்க்ல இருக்கேன்.அப்புறம் பேசறேன்’ என்பதே
mohanram.ko
என் கூட கூட்டணி வைக்க, எது உன்னை ஹெவியா லைக் பண்ண வெச்சுச்சு
நானும் பாராளுமன்றம் போகமாட்டேன், நீங்களும் போக மாட்டீங்க… அது ஒண்ணுதான்
Kirachand
அதிமுக பெயர்,கொடி,சின்னம் பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு நிரந்தர தடை…
உனக்குத்தான் நிரந்தரமா தாமரை இருக்கேப்பா!
நெல்லை அண்ணாச்சி
1)அமமுக
2)ஓபிஸ் அணி
3)தமிழ் மாநில காங்கிரஸ்
4)புதிய நீதி கட்சி
5)தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்
6)பாஜக..” மெகா “கூட்டணி.…!!!
# எல்லா புகழும் அண்ணாமலைக்கே
Mannar & company
என்ன பெரிய ED ரெய்டு..
பொதுத் தேர்வுக்கு காப்பியடிப்பதை தடுக்க வரும் பறக்கும் படை தெரியுமா?
மயக்குநன்
இண்டியா கூட்டணி பெண்களை அவமரியாதை செய்கிறது!- பிரதமர் மோடி.
ஆமாமா… மணிப்பூர் பெண்கள் மேல சத்தியம்..!
ச ப் பா ணி
எல்லாரும் ஈசியா கட்சி மாறுறாங்க.. நம்மால் தான் ஈசியா கம்பெனிகூட மாற முடியல
மயக்குநன்
பாஜக தமிழகத்தில் வேரூன்றிவிட்டது!- துரை வைகோ.
நீங்க இன்னமும் திமுகவின் கிளைகளைப் பிடிச்சு தொங்கிட்டே இருங்க..!
Mannar & company
தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால் ரூ50,000 மேல வெளியே எடுத்து செல்ல வேண்டாம்!
என்னைய விடுங்கடா.. நான் ATM ல பணம் fill பண்றவன்டா!!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
சங்கரராமன் கொலை வழக்கு: நீதிபதியின் பணி நீக்கத்தை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!
விபத்தில் சிக்கிய ‘சைத்தான்’ நடிகை… தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!