கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இன்று (மார்ச் 18) அஞ்சலி செலுத்தினார்.
கோவை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை 5.45 மணிக்கு தனி விமானத்தில் கோவை வந்தடைந்தார்.
மாலை 6.10 மணிக்கு சாய்பாபா நகர் ஏஆர்சி ஜங்ஷன் பகுதியில் ரோடு ஷோவை பிரதமர் மோடி துவங்கினார். அவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர். வழிநெடுகிலும் பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
பிரதமர் மோடியின் ரோடு ஷோவானது கங்கா மருத்துவமனை, வடகோவை, அவினாசி லிங்கம் மகளிர் பல்கலைக்கழகம், சிந்தாமணி பகுதி வழியாக ஆர்.எஸ் புரம் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவடைந்தது. அங்கு கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மேலும், கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர் எஸ்.ஆர்.சேகர் பிரதமர் மோடிக்கு விளக்கினார்.
இன்று இரவு கோவை சர்க்யூட் ஹவுஸில் தங்கும் பிரதமர் மோடி, நாளை கேரளா சென்றுவிட்டு மதியம் சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சங்கரராமன் கொலை வழக்கு: நீதிபதியின் பணி நீக்கத்தை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!
‘கோட்’ படத்தின் ஷூட்டிங்கில் விஜய்…திக்குமுக்காடிய திருவனந்தபுரம்