பெல்லி சூப்புலு தமிழ் ரீமேக் : விரைவில் வெளியீடு!

entertainment

தெலுங்கில் வெற்றி பெற்ற பெல்லி சூப்புலு படத்தை தமிழில், ஹரிஷ்கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்க, ‛ஓ மணப்பெண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இப்படம் விரைவில் வெளியாகிறது. இது சம்பந்தமாக சென்னையில் பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது படம் பற்றி கதாநாயகி ப்ரியா பவானி சங்கர் கூறுகையில், ”இப்படம் அனைவருக்கும் திருப்தி தந்த படம். ஹரிஷ் நல்ல ஒத்துழைப்பு தந்தார். மற்ற படங்களில் ஹீரோவுக்கு ஜோடியாக தான் பாத்திரம் இருக்கும், ஆனால் இப்படத்தை தைரியமாக என் படம் என சொல்வேன். அந்தளவு என் கதாப்பாத்திரம் அழுத்தமாக இருந்தது” என்றார்.

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், ‛பெல்லி சூப்புலு படத்தை கெடுத்து விடாமல், தமிழுக்கு ஏற்றபடி மாற்றம் செய்துள்ளோம். ஹரிஷ், ப்ரியா பவானி சங்கர் வந்தபின் படத்திற்கு பலம் வந்து விட்டது. படத்திற்கு தேவையான எதையும் நான் புதிதாக செய்யவில்லை,” என்றார்.

**அம்பலவாணன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *