மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்?

40 தொகுதி மெகா சர்வே முடிவு அரசியல்

2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங் எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார்.

கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்

18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான

மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்திமேலூர்  ஆகியவற்றில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…

 

திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.

அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார்.

பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆகமதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

GOAT: கேப்டனுடன் இணைந்து ஆடும் தளபதி… புகைப்படம் உள்ளே!

மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணியில் வெல்லப்போவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு?

மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி?

மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு?

மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
1
+1
0
+1
1

1 thought on “மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்?

  1. பொய் சொல்ல அளவே இல்லையா நீ போடுறது எல்லாம் கருத்து கணிப்பா 😡😡

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *