உக்ரைனை ஆதரிக்க வேண்டிய தருணம் இது என்று பதவி விலகிய இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் கூறியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, அரசர் மூன்றாம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவித்தார்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகினார்.
அப்போது பேசிய அவர், “இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குகளின்போது பிரதமராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்பும் புதிய அரசராக சார்லஸ் பொறுப்பேற்றபோது பணியாற்ற வாய்ப்பும் எனக்குக் கிடைத்ததில் பெருமை அடைகிறேன்.
முந்தைய சர்வதேச சந்தையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களால் பாதிப்படைய கூடிய நிலை என்பது மாறி வருகிறது. நமது நாட்டில் பல பகுதிகளில் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருகிறது.
வலிமையான நடவடிக்கைகளை தைரியமாக எடுக்க வேண்டிய கட்டத்தில் இங்கிலாந்து இருக்கிறது. மக்களுக்கு வாய்ப்புகளையும், சுதந்திரத்தையும் வழங்குவது நம்முடைய எண்ணம்.
முந்தைய எப்போதும் இல்லாத அளவுக்கு ரஷ்யா நடத்தக்கூடிய தாக்குதலில் உக்ரைன் பக்கம் நிற்க வேண்டிய தருணம் இது.
பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
-ராஜ்
கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936.44 கோடி அபராதம் விதித்த சிசிஐ: காரணம் என்ன?
கிச்சன் கீர்த்தனா – ரவா மில்க் ஸ்வீட்