GOAT: கேப்டனுடன் இணைந்து ஆடும் தளபதி… புகைப்படம் உள்ளே!

Published On:

| By Manjula

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் GOAT படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், இன்று (ஏப்ரல் 14) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

மதன் கார்க்கி எழுதி இருக்கும் இப்பாடலை தளபதி விஜய் பாடியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

வருகின்ற செப்டம்பர் 5-ம் தேதி GOAT வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் அப்டேட் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்காக முதல் பாடலை இன்று வெளியிடுகின்றனர்.

இந்தநிலையில் ‘விசில் போடு’ எனத் தொடங்கும் இப்பாடலில், தளபதி விஜயுடன் இணைந்து மறைந்த கேப்டன் விஜயகாந்தும் நடனம் ஆடியுள்ளதாகத் தெரிகிறது.

ஏஐ தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்த் படத்தின் சில காட்சிகளில் இடம்பெறுவார் என, முன்னதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

தற்போது அது உண்மை என்று தெரியவந்துள்ளது. ஆனால் பாடலில் மட்டும் கேப்டன் இடம் பெறுகிறாரா? இல்லை படத்தின் சில காட்சிகளிலும் வருவாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போது GOAT படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்றுள்ளது. இதில் விஜய் வில்லத்தனம் நிறைந்த விஜய் மற்றும் ப்ரோபஸர் என்று, இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, திரிஷா என மொத்தம் நான்கு நடிகைகள் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கம் என்பதால் படம் கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என, ரசிகர்கள் தீவிர நம்பிக்கையுடன் காத்துள்ளனர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஓட்டுக்கு  500… பட்டுவாடாவை தொடங்கிய தாமரை- ஷாக் திமுக

Video: தமன்னா, ராஷி கண்ணா கலக்கல் நடனம்… ‘அச்சச்சோ’ சாங் இதோ..!

CSK Vs MI: பர்ஸ்ட் டைம் இப்படி நடக்குது… கவலையில் ரசிகர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment