மருத்துவமனையிலிருந்து சத்குரு டிஸ்சார்ஜ்!

தமிழகம்

டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு இன்று (மார்ச் 27) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான சத்குருவிற்கு மார்ச் 17ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்பிறகு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு எதிர்பார்த்ததை விட மிக வேகமாக அவர் உடல்நலம் தேறி வருகிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு கிட்டத்தட்ட 10 நாட்கள் கழித்து இன்று சத்குரு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முன்னதாக, அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் “சத்குரு உடல் நலம் தேறி வருவது குறித்து மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர் குணமடையும் அதே வேளையில் அவருடைய உற்சாகத்தை அப்படியே தக்கவைத்து கொண்டுள்ளார்.

Image

உலகளாவிய நன்மைக்கான அவரது அர்ப்பணிப்பு, அவருடைய புத்தி கூர்மை மற்றும் அவரின் நகைச்சுவை உணர்வு அனைத்தும் அப்படியே சிறப்பாக உள்ளது. அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது ஒரு நற்செய்தியாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

இந்நிலையில் சத்குருவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வினித் சூரி, பிரணவ் குமார், சுதீர் த்யாகி, எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை நன்றி தெரிவித்துள்ளது.

“இந்த சவாலான சூழலில் உலகெங்கும் இருந்தும் சத்குருவிற்கு அன்பையும் ஆதரவையும் அளவற்ற வகையில் வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி” என்றும் ஈஷா கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகளிருக்கு 50% இடஒதுக்கீடு, இடைத்தேர்தல் ஒழிப்பு : சீமான் வாக்குறுதி!

கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து : அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *