மகளிருக்கு 50% இடஒதுக்கீடு, இடைத்தேர்தல் ஒழிப்பு : சீமான் வாக்குறுதி!

Published On:

| By indhu

மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்தி தரப்படும் என இன்று (மார்ச் 27) வெளியிடப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் இன்று (மார்ச் 27)  வெளியிட்டார்.

இத்தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்:

  • குடியரசுத் தலைவர் பதவியை மக்களே தேர்வு செய்ய வலியுறுத்தல்
  • ஆளுநர் பதவியை நீக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வலியுறுத்தல்
  • மாநிலங்களவை உறுப்பினர் அமைச்சராவதை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம்
  • சட்டப்பிரிவு 356 நீக்கம் செய்யப்படும்
  • ஊழல் செய்பவர்களுக்கு தேர்தலில் தடை
  • தேர்தலில் ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை
  • சிறைக்கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை
  • இடைத்தேர்தல் முறை ஒழிப்பு
  • மற்ற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட தடை
  • மண்ணின் மைந்தர்களுக்கு நீதிபதி பதவி, வேறு மாநிலத்தவர்களுக்கு தடை
  • நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடும் மொழியாக கொண்டு வரப்படும்
  • பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படும்
  • மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு
  • கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
  • வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டிற்குள் குடியேறுவது கண்காணிக்கப்படும்
  • சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். சட்டங்கள் ரத்து
  • அண்டை நாட்டு கடற்படை, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்க நெய்தல் படை
  • நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்படும்
  • சுங்கச்சாவடிகளில் 40 சதவீதம் கட்டணம் குறைப்பு
  • பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி நிறுத்தம்
  • சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறுத்தம்

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சௌமியாவுக்காக, ’இடைத் தேர்தல்’ பாணியில் தர்மபுரியில் குவிந்த பாமக நிர்வாகிகள்: பாஜக ஷாக்!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்காதது ஏன்? – தேர்தல் ஆணையம் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel