கிச்சன் கீர்த்தனா: லெமன், ஜிஞ்சர் ஸ்குவாஷ்

கோடையைத் தணிக்கும் பழங்களில் எலுமிச்சை முதன்மையாக உள்ளது போல் கோடையில் ஏற்படும் நோய்களில் இருந்து காப்பது இஞ்சி. இஞ்சி சாறுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் பித்தம் குறையும். கோடைக்கேற்ற சிறந்த பானங்களில் ஒன்று இந்த லெமன், ஜிஞ்சர் ஸ்குவாஷ்.

என்ன தேவை?

எலுமிச்சைச்சாறு – அரை கப்
இஞ்சிச்சாறு – அரை கப்
தண்ணீர் – ஒரு கப்
சர்க்கரை – 2 கப்
சிட்ரிக் ஆசிட் – அரை டீஸ்பூன்

ஸ்குவாஷ்  செய்வது எப்படி?

இஞ்சியைத் தோல் நீக்கி துண்டுகள் செய்து மிக்ஸியில் அரைத்து, ஒரு துணியில் வைத்து பிழிந்து சாறு எடுக்கவும். இஞ்சிச் சாற்றை அசைக்காமல் 5 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு தெளிவாக மேலே தங்கி இருக்கும் சாறை மட்டும் வடிகட்டிக் கொள்ளவும். அடியில் தங்கும் சுண்ணாம்பைப் பயன்படுத்தக்கூடாது. ஒரு கப் தண்ணீரில் 2 கப் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். அதில் சிட்ரிக் ஆசிட் சேர்த்து இறக்கி ஆறியதும், இஞ்சிச் சாற்றையும், எலுமிச்சைச் சாற்றையும் கலக்கவும். இதற்கு எசன்ஸ், கலர் தேவையில்லை.

ஜூஸ் கலக்குவது எப்படி?

கால் பங்கு ஸ்குவாஷில், முக்கால் பங்கு தண்ணீர் மற்றும் ஐஸ் கட்டி சேர்த்துப் பருகவும். இந்த ஜூஸ் பித்தம், பித்த தலைவலிக்கு உகந்தது.

குறிப்பு:
இந்த ஸ்குவாஷ் சில மாதங்கள் ஆனாலும் கெடாது. தேவைப்படும்போது சிறிது தண்ணீருடன் கலந்து அருந்தினால் அருமையான ஜூஸ் ரெடி.

லெமன் ஸ்குவாஷ்

மாம்பழ ஸ்குவாஷ்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts