சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள மின்வாரிய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.
சென்னை அண்ணா சாலை தர்கா அருகே உதவி மின் பொறியாளர் அலுவலகம் மற்றும் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடத்தில் இன்று காலை 6 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட கணினிகள் மற்றும் மின் நுகர்வோரின் தகவல்கள் எரிந்து சேதமடைந்துவிட்டன.
அதேநேரத்தில் அருகிலிருந்த துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்படவில்லை. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை எதுவும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தினால் மின்சார வாரிய ஊழியர்கள் யாருக்கும் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்றும் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோனிஷா
எம்.பி.பி.எஸ்எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்!
வங்கக்கடலில் வங்கக்கடலில் புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை