IPL 2024 : சொந்த மைதானத்தில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியை வெறும் 89 ரன்களுக்கு சுருட்டிய டெல்லி அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (ஏப்ரல் 17) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாஹா மற்றும் சுப்மன் கில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் மட்டுமே 31 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களை கூட தாண்டவில்லை.
டெல்லி அணியின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறிய குஜராத் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Lightning⚡️ stump by Rishabh Pant 👏#DCvsGTpic.twitter.com/IkvaXWWLXe
— Don Cricket 🏏 (@doncricket_) April 17, 2024
டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
சீக்கிரம் அடித்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடிய அந்த அணி பவர்பிளே முடிவில் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சிறிது தடுமாறியது.
The class of Rishabh Pant. 💥pic.twitter.com/VlW2sU8VFM
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 17, 2024
எனினும் 5வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ரிஷப் பந்த் – சுமித் குமார் ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் 25 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
8.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் குவித்த டெல்லி அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
2 கேட்ச் மற்றும் 2 ஸ்ட்ம்பிங் உடன், 1 சிக்சர் மற்றும் 1 பவுண்டரியுடன் 92 ரன்கள் குவித்த ரிஷப் பந்த் ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக இது அவர் பெறும் 7 ஆட்டநாயகன் விருதாகும். அந்த அணிக்காக அதிகபட்சமாக முன்னாள் வீரர் சேவாக் 10 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? : ரெய்னா கொடுத்த அப்டேட்!
’அந்த படத்த எப்படி லாபம்னு சொல்லுவீங்க?’ : யூடியூப் சேனலுக்கு திருப்பதி பிரதர்ஸ் கண்டனம்!