'How can you tell the profit of that film?': Tirupati Brothers condemned

’அந்த படத்த எப்படி லாபம்னு சொல்லுவீங்க?’ : யூடியூப் சேனலுக்கு திருப்பதி பிரதர்ஸ் கண்டனம்!

சினிமா

கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் உருவான ’உத்தமவில்லன்’ திரைப்படம், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில் தமிழ் திரையுலகம் குறித்த தகவல்களை நாள்தோறும் பகிர்ந்து வரும் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில், உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் லிங்குசாமி கூறியதாக தெரிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து உத்தம வில்லன் படத்தை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.

அதில், “தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றிப்படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்,

Uttama Villain (2015) (2015) - Movie | Reviews, Cast & Release Date - BookMyShow

பத்ம ஸ்ரீ கமலஹாசனை வைத்து FIRST COPY (முதல் பிரதி) அடிப்படையில் தயாரித்த திரைப்படமான “உத்தம வில்லன்” எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது கமலஹாசனுக்கும் நன்றாகவே தெரியும்.

“உத்தம வில்லன்” திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமலஹாசன், மறைந்த அவரது சகோதரர் சந்திரஹாசனும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.

அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான “வலை பேச்சு” என்கிற யூடியூப் சேனலில் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் லிங்குசாமி கூறியதாக இன்று (ஏப்ரல் 17 ) தவறான தகவல்களை கூறியுள்ளனர்.

இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை” : உயர்நீதிமன்றம்

’வாட்ஸ் அப்பில் கூட பிரச்சாரம் கூடாது’ : தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *