WPL 2024: அடித்து நொறுக்கப்பட்ட 5 சாதனைகள்… யாரெல்லாம் சம்பவம் செஞ்சு இருக்காங்கன்னு பாருங்க!

சிறப்புக் கட்டுரை விளையாட்டு

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர், கடந்த மாதம் பிப்ரவரி 23 அன்று ஒரு த்ரில் போட்டியுடன் துவங்கி, மார்ச் 17 அன்று ஒரு த்ரில் போட்டியுடன் நிறைவு பெற்றது.

எலிமினேட்டர் ஆட்டத்தில் கடைசி பந்து வரை போராடி, நடப்பு சாம்பியன் மும்பையை வெளியேற்றியது பெங்களூர்.

மற்றும் இறுதிப்போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக கடைசி ஓவர் வரை போராடி வெற்றி பெற்று, கோப்பையையும்  தன்வசமாக்கியது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்சிபி மகளிர் அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

Kanguva டீசர் ரெடி… Sizzle இதற்கான அர்த்தம் என்ன?

மறுமுனையில், 2 முறை கோப்பைக்கு மிக அருகில் வந்த டெல்லி அணி, 2 முறையும் வெற்றியை நூலிழையில் தவறவிட்டது.

அப்படி, துவக்கத்தில் இருந்து இறுதிவரை பல்வேறு ஆச்சரியங்கள் நிறைந்த இந்த தொடரில், வீராங்கனைகள் பல அற்புதமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அதில் டாப் 5 சாதனைகளின் லிஸ்ட் இதோ!

மின்னல் வேக பந்து

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 12-வது லீக் ஆட்டத்தில், மும்பை அணியின் ஷப்னிம் இஸ்மாயில், மகளிர் கிரிக்கெட்டில் மிக வேகமான பந்தை வீசிய வீராங்கனை என்ற தனது சாதனையை, தானே முறியடித்தார்.

இப்போட்டியில், 3-வது ஓவரை வீசிய இஸ்மாயில், அந்த ஓவரின் 2-வது பந்தை 132.1 கி.மீ வேகத்திற்கு வீசினார்.

Bastar The Naxal Story : படம் எப்படி இருக்கிறது? – திரை விமர்சனம்

இதன்மூலம், மகளிர் கிரிக்கெட்டில் 130 கி.மீ வேகத்திற்கு மேல் பந்து வீசிய முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

மேலும், 2016-இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 128 கி.மீ வேகத்தில் பந்து வீசி, தான் படைத்த சாதனையை மீண்டும் தானே முறியடித்தார், ஷப்னிம் இஸ்மாயில்.

2024 WPL-ன் முதல் 5-விக்கெட் ஹால்

இந்த தொடரின் 2-வது போட்டியில், உபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூர் அணியின் ஆஷா சோபனா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன்மூலம், இந்த தொடரின் முதல் 5-விக்கெட் ஹாலை பெற்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

மேலும், இந்த மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் 5-விக்கெட் ஹாலை எடுக்கும் முதல் இந்திய வீராங்கனையும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் வீராங்கனை

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான 19-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மிக அற்புதமாக பந்து வீசினார், எல்லிஸ் பெர்ரி.

அப்போட்டியில், தனது மிரட்டலான பந்துவீச்சால், 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம், WPL வரலாற்றில் ஒரே போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய, முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

அதுமட்டுமின்றி, முதல் தர கிரிக்கெட், லிஸ்ட் – ஏ கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் என 3 வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும், சதம் மற்றும் 6 விக்கெட் ஹால் என இரண்டையும் கைப்பற்றிய முதல் கிரிக்கெட்டர் என்ற சாதனையையும் படைத்தார்.

2024 WPL தொடரில் ஒரு ஹாட்-ட்ரிக்

டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிரான 15-வது லீக் ஆட்டத்தில், உபி வாரியர்ஸ் அணியின் தீப்தி சர்மா, இந்த தொடரின் முதல் மற்றும் ஒரே ஹாட்-ட்ரிக்கை பதிவு செய்தார்.

மேலும், மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் ஹாட்-ட்ரிக்கை பதிவு செய்யும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் தீப்தி சர்மா பெற்றார்.

மாயாஜாலம்

இந்த தொடரின் 16-வது லீக் சுற்று ஆட்டத்தில், மும்பை அணிக்கு எதிராக முதலில் களமிறங்கிய குஜராத் அணி 190 ரன்கள் குவித்தது.

191 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி, துவக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்தது.

இதன் காரணமாக, கடைசி 6 ஓவர்களில் 92 ரன்கள் தேவை என்ற கடினமான சூழலுக்கு மும்பை சென்றது.

ஆனால், களத்தில் நின்று வாண வேடிக்கை காட்டிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 95 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.

இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது.

இந்த தொடருக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவினை பார்க்கும்போது வரும் நாட்களில் மகளிர் கிரிக்கெட் மேலும் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு கிரிக்கெட் அணிகளின் எண்ணிக்கையும் கூட மேலும் உயருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

மகிழ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காங்கிரஸ் தலைவரான ஜெகன் மோகனின் தங்கை! பாஜகவுடன் தெலுங்கு தேசம்…ஆந்திராவில் வெல்லப் போவது யார்?

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்? எந்தெந்த தொகுதிகள்?

Rain Update: நோட் பண்ணிக்கங்க மக்களே… தொடர்ந்து நாலு நாளைக்கு மழை இருக்கு!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *