மகுடம் சூடிய இந்தியா: பிரதமர் வாழ்த்து!

விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி மகுடம் சூடியதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் 7அணிகள் பங்கேற்ற, 20ஓவர் 8வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது.

இதில், நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. அரையிறுதியில் இலங்கையிடம் பாகிஸ்தான் 1 ரன்னில் தோல்விகண்டது.

மற்றொரு அரையிறுதியில் இந்தியாவிடம் தாய்லாந்து தஞ்சமடைந்தது. இதையடுத்து இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இன்று (அக்டோபர் 15)நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், நிர்ணயிக்கப்பட்ட 20ஓவர்களில் 9விக்கெட் இழப்பிற்கு 65ரன்கள் எடுத்தது. இந்திய வீராங்கனை ரேனுகா சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

india womans cricket team

பின்னர் 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷபாலி வர்மா 5ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி, 25பந்துகளில் 51ரன்களை விளாசினார். இறுதியில் 8.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி 7வது முறையாக ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி மகுடம் சூடியதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், இன்று(அக்டோபர் 15) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

“இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அவர்களின் திறமையால் நம் அனைவரையும் பெருமைப்படுத்துகிறது.

மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். அவர்கள் சிறந்த திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளனர். வீராங்கனைகளின் வரவிருக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

கடுமையான வலை பயிற்சியில் விராட் கோலி

ஆசியக் கோப்பை: 7வது முறையாக வென்ற இந்தியா!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *