x‘பிரிட்டன் பிரிவு’: ஆங்கில மொழி வெளியேற்றம்!

public

�கருத்து வாக்கெடுப்பில் 51.9 சதவிகிதம் பேர் ஆதரவளித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவை கடந்த ஜுன் 24ஆம் தேதி பிரிட்டன் எடுத்தது. பிரிட்டன் மக்களுக்கு இது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் மறுபக்கம் இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பிரிட்டனில் வசிக்கும் பிறநாட்டினர் நிலை கேள்விக்குறியாக உள்ளது. பிரிட்டனில் பிறநாட்டினருக்கு எதிராக ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது ஒருபக்கமிருக்க, பிரிட்டன் முடிவைத் தொடர்ந்து ஆங்கில மொழியை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அதிகாரபூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து வெளியேற்ற முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் இந்த விவகாரத்தில் மறுப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரசெல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஆனாலும், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியதை முறைப்படி அதிகாரபூர்வமாக அறிவிக்காதவரை பிரிட்டனுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் கிடையாது என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *