Xதமிழக சிறைகளில் அதிநவீன ஜாம்மர்!

public

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன ஜாம்மர் கருவிகளை பயன்படுத்த தமிழ்நாடு சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், பெண்கள் தனிச் சிறை உட்பட 12 மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. இதைத் தவிர்த்து பல்வேறு துணை சிறைச்சாலைகளும் உள்ளன. இவற்றில் போதைப்பொருட்கள், செல்போன்கள் போன்றவை தடையில்லாமல் புழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய குற்றவாளிகள் சிலர் சிறையில் இருந்தவாறே சமுதாயத்தில் பல்வேறு குற்றச்செயல்களை அரங்கேற்றுவதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்துவதுண்டு. அப்படியிருந்தும் சிறைகளில் மொபைல்கள் பயன்பாடு என்பது அதிகளவிலேயே உள்ளது.

தற்போது தொழில்நுட்ப ரீதியாக இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஜாம்மர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஜாம்மர், புழல் மத்திய சிறையில் இந்த வாரம் பொருத்தப்பட்டுள்ளது. நவம்பர் மாத இறுதிகளுக்கு அனைத்துச் சிறைகளிலும் இந்த ஜாம்மர் பொருத்தப்படும் என்று சிறைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிறைத்துறை கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு கூறுகையில்,” மத்திய சிறைகளில் தீவிரவாதிகள், முக்கிய குற்றவாளிகள், அடிப்படைவாதிகள் அடைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு பகுதிகளில் இந்த ஜாம்மர்கள் நிறுவப்படவுள்ளது. தமிழக சிறைகளில் குறிப்பிட்ட பகுதிகளுக்கான ஜாம்மர்கள் நிறுவப்படுவது இதுவே முதன்முறை. இந்த ஜாம்மர்கள் இந்தியா எலக்ட்ரானிக் நிறுவனம் (இ.சி.இ.எல்) மூலம் சேகரிக்கப்பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக இ.சி.இ.எல். நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,” இந்த ஜெர்மன் ஜாம்மர்கள் மிகவும் பயன் தரக்கூடியது. மாவோயிஸ்ட்கள் அடைக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் இந்த ஜாம்மர்களை நிறுவியுள்ளனர். ஜார்க்கண்ட் முதல்வரின் பாதுகாப்பு நெறிமுறைகளில் இந்த ஜாம்மர் பயன்பாடும் உள்ளது. என்று தெரிவித்தார். இந்த ஜாம்மர்கள் மூலம் குறிப்பிட்ட பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் மொபைல் இணைப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *