Xஅரசுப் பணத்தை விரயம் செய்கிறோமா?

public

தமிழகம் முழுக்க, ‘கிளீன் பிளாக் மணி ஆபரேஷன்’ என்ற பெயரில் சசிகலா, தினகரன் வட்டாரத்தினரைக் குறிவைத்து வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்துகொண்டிருந்த நிலையில்.,.. இன்று (நவம்பர் 9 ) தேனி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்டம் ஓ.பன்னீரின் சொந்த மாவட்டம் என்பதால் தன் பலத்தை எடப்பாடி பழனிசாமிக்கு காட்டுவதற்காக பலத்த ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த விழாவில்… எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மூலம் அரசுப் பணம் விரயம் செய்யப்படுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார் முதல்வர்.

அவர் தனது உரையில்…

’’ஒவ்வொரு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிலும் மாநாடு போல கூட்டம் கூடுகிறது. எங்கள் சொல்வாக்கு சுத்தமாக இருப்பதால் எங்கள் செல்வாக்கும் உயர்கிறது. இதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு சிலர் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்கள் மூலம் பயன்பெறும் மக்களுக்கு உண்மை தெரியும். இன்று பொதுப்பணித்துறை சார்பில் 65 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். பல்வேறு துறைகள் சார்பில் 99 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கி வருகிறோம்’’ என்று குறிப்பிட்டார் முதல்வர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *