Wநடிகர்களின் கர்ஷிப் கலாச்சாரம்!

public

yஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக சமூக ஊடகங்கள் மூலம் கருத்துக்களை பரப்பி களம் இறங்கியிருக்கும் இளைஞர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மக்கள் கூட்டம் தமிழகம் முழுக்க திரண்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் யாரையும் அனுமதிக்காமல் போராட்டம் நடத்துவதாலேயே எண்ணற்ற மக்களை போராட்டத்தின் பக்கம் இழுத்துள்ளது. நடிக-நடிகைகள் நேரில் வந்திருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கூட்டத்தில் சலசலப்பு உருவாகிவிடக்கூடாது என்பதற்காக முன்னணி நடிகர்களான் விஜய், கார்த்தி போன்றோர் முகத்தை கர்ஷிப்பால் மறைத்துக் கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இது முற்றிலும் வரவேற்கப்படவேண்டிய விஷயம்.

ஆனால் மெரினாவில் உள்ள போராடும் இளைஞர்களிடம் விசாரித்த போது **எவ்வளவு பெரிய நடிகர்களானாலும் சரி, கர்ஷிப்பால் முகத்தை மறைக்கமால் வந்தால் கூட , எங்களது கவனம் பீட்டா மற்றும் மத்திய அரசிற்கு எதிராக கோஷம் போடுவதில் தான் இருக்கும். நிரந்தரச் சட்டம் வரும் வரை நாங்கள் எதையும் பொருட்படுத்த போவதில்லை. இதனால் நாங்கள் அவர்களோடு செல்ஃபி எடுத்துக்கொண்டிருப்போம் என்று நினைத்து விட வேண்டாம்.**

**சூர்யவம்சம் திரைப்படத்தில் தனது மகன் நடத்தும் விழாவில் கூட்டத்தில் ஒருவராக அப்பா சரத்குமார் மறைந்திருந்து பார்த்து பெருமைப்பட்டுக்கொள்வார். அந்த மாதிரி தான் சார் இது இருக்கு** என மீம்ஸ் போட தயாராகி விட்டனர் நம் இளைஞர்கள்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *