கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – கோடைக்கேற்ற காய்கறிகள்!

public

வெள்ளரிக்காயும் வெண்பூசணியும் வெயிலுக்கேற்ற காய்கறிகள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவை தவிர கோடைக்காலத்தில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டிய நீர்ச்சத்து நிறைந்த முக்கியமான காய்கறிகளை அவசியம் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

**தக்காளி**

வைட்டமின் சி, கே 1, பி 9 சத்துகள் தக்காளியில் நிறைந்திருப்பதால், அது ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுகிறது. 95 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்தது. நார்ச்சத்து அதிகமிருப்பதால், தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு மற்றும் அது தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகும்.

**பாகற்காய்**

கோடையில் சருமத்தில் கொப்புளங்கள், தடிப்பு, படர்தாமரை போன்றவை ஏற்படும். பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளை மிக எளிதாகத் தவிர்க்கலாம். பாகற்காய் சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

**கத்திரிக்காய்**

இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருப்பதால், கத்திரிக்காய் ஆன்டி ஆக்ஸிடன்டாகச் செயல்படும். நோய்த்தொற்றுகளைத் தடுக்கும். மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சினைகளைச் சரிசெய்ய உதவும்.

**புடலங்காய்**

கோடையில் ஏற்படும் சுவாசக்குழாய் தொடர்பான தொற்றுகளைத் தவிர்க்க புடலங்காய் உதவும். அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்சினைகளையும் புடலங்காய் சரிசெய்யும். உடலிலுள்ள நச்சுகளை நீக்குவதோடு, சருமப் பராமரிப்புக்கும் உதவும்.

**பீன்ஸ்**

பீன்ஸில் வைட்டமின் மற்றும் ஃபோலேட் சத்துகள் நிறைந்திருப்பதால், மனநலத்தைக் காக்கும். இதிலுள்ள அமினோ அமிலம், சுரப்பிகளின் செயல்பாடுகளைச் சீராக்கும். மிகக் குறைந்த அளவே கலோரி இருக்கும் என்பதால், பகல் நேரத்தில் உடல் சோர்வு ஏற்படாமல் காக்கும்.

**சிறப்பு**

நீர்க்காய்கறிகள் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்று பயப்படுபவர்களும் கோடைக்காலத்தில் கட்டாயம் நீர்க்காய்கறிகள் சாப்பிட வேண்டும். அப்போதுதான் உடலில் போதுமான நீர்ச்சத்து இருந்துகொண்டே இருக்கும். பசியின்மை பிரச்சினையும் வராது.

**[நேற்றைய ஸ்பெஷல்: வெனிலா பாப்சிகல்](https://www.minnambalam.com/public/2021/04/10/1/vanilla-popsical)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *