tபோருக்கு அழைத்துச் செல்லுங்கள்: பூனம் கௌர்

public

‘இந்தியாவில் ஆபாச நடிகைகளுக்குத்தான் மரியாதை கொடுக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளார் நடிகை பூனம் கௌர்.

பூனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் ஆபாச நடிகைகளுக்குத்தான் அதிகம் மரியாதை கொடுக்கப்படுகிறது. அப்பாவிப் பெண்கள் எதற்காகவாவது தைரியமாக வெளியே வந்தால், அவர்களைத் தவறாகப் பயன்படுத்துவது, கிண்டல் செய்வது வழக்கமாகிவிட்டது. அவர்களின் ஆன்மா, மனது, உடல் என அனைத்தையும் கொல்வதற்கு ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் உருவான ‘பத்மாவதி’ மற்றும் ‘பாகமதி’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் அதீத ஆதரவு கொடுத்தவர் பூனம். பத்மாவதி படத்துக்கு பிரச்னை ஏற்பட்ட சமயத்தில், அடல்ட் வீடியோ நடிகையான மியா நடித்துள்ள God Sex & Truth படத்துக்குக் கிடைத்த பேராதரவு, இவரை இப்படிப் பேசத் தூண்டியிருக்கிறது.

பத்மாவதி படத்தைப் பார்த்த பூனம், இயக்குநர் மற்றும் தீபிகாவைப் பாராட்டியதோடு **போர் காட்சிகளில் இங்கு தெருக்களில் சுற்றிக்கொண்டிருப்பவர்களை அழைத்துச் சென்று நடிக்கவைத்திருந்தால் நாட்டின் கலாசாரத்தை எப்படிப் பாதுகாப்பது என்று கற்றுக்கொண்டிருப்பார்கள்** என சஞ்சய் லீலா பன்சாலிக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முகம் தெரிந்தவரான பூனம் கௌர் தமிழில் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவருக்குத் தமிழில் நடிக்க சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றில் நடிக்க மறுத்துவிட்டார். கதாநாயகியாக நடிக்காவிட்டாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில்தான் நடிப்பேன் எனக் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களையே தேர்வு செய்து நடித்துவருகிறார். இவர் தமிழில் நடித்து வெளியான நெஞ்சிருக்கும் வரை, பயணம், 2 மெழுகுவத்திகள் என எல்லாப் படங்களுமே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களாகும். தற்போது பூனம் கவுர் தெலுங்கிலும் இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *