Tகரூர் சம்பவம்-கருணாநிதி கேள்வி

public

திமுக தலைவர் கருணாநிதி, கரூர் பணப்பறிமுதல் மற்றும் கரூர் மாவட்டக் காவல்துறை பெண் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேமீது சிலர் கொலைமுயற்சியில் ஈடுபட்டது தொடர்பாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், அதிமுக-வைச் சேர்ந்த மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவரும், அவர்களுடைய அனைத்து விவகாரங்களையும் உடனிருந்து கவனித்துவருபவருமான கரூர்-அய்யம்பாளையத்தைச் சேர்ந்த அன்புநாதன் என்பவரின் வீடு மற்றும் கிடங்கு ஆகியவற்றில் சோதனை நடத்தியவர் கரூர் மாவட்ட காவல்துறை பெண் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே என்பவராவார். அவர் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் வெளியாயின. இதுவரை, மறைத்து வைக்கப்பட்டிருந்த இப்படிப்பட்ட தகவல்கள் வெளியுலகக் கவனத்தை ஈர்ப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் வந்திதா பாண்டே என்ற பெண்மணி ஆவார். ரெய்டுக்குப்பிறகு, அவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருக்கின்றன. எஸ்.பி.வந்திதா பாண்டே நேர்மையுடனும், துணிச்சலாகவும் நடவடிக்கை மேற்கொண்டுவருவதால் அவரை சுட்டுக்கொல்ல அனுப்பிய அதேநேரத்தில், வந்திதா பாண்டே தற்கொலைக்கு முயன்றதாக அன்புநாதனின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு வதந்தியொன்றைப் பரப்பியிருக்கிறார்கள். கரூர்-அய்யம்பாளையத்தில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவமும், நேற்று கரூர் எஸ்.பி.யை சுட்டுக்கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் சாதாரணமான நிகழ்வுகள் அல்ல. அய்யம்பாளையம் சம்பவம் இந்திய தேசக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எஸ்.பி-யைக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தமிழக காவல்துறைக்கு, தனி நபர்கள் சிலரால் விடப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவாலாகும். எனினும், இந்த நிகழ்வுகளில் இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது வேடிக்கையாகவும், விநோதமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ததற்காக, பாடகர் கோவனைக் கைதுசெய்து சிறையில் அடைத்ததோடு, அவர்மீதும், மேலும் “மக்கள் அதிகாரம்” என்னும் அமைப்பைச் சேர்ந்த ஆறுபேர்மீதும் தேச விரோத வழக்கு தொடர்ந்திருக்கும் ஜெயலலிதா அரசு, தொடர்பில்லாத சிலரிடமிருந்து எழுத்துபூர்வமான புகார் வந்திருப்பதாகச்சொல்லி, முதல் தகவல் அறிக்கைகூடத் தாக்கல் செய்யாமல், குற்றமேதும் புரியாதவர்களைக்கூட அவசரஅவசரமாக, கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஜெயலலிதா அரசு, அய்யம்பாளையம் சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யாமல், கடும் குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாக உலா வருவதற்கும், குற்றங்கள் சம்பந்தமான ஆதாரங்களைக் காவல்துறையில் உள்ள சிலருடைய உதவியோடு மறைப்பதற்கும், அழிப்பதற்கும் அனுமதித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். இந்திய நாட்டின் பொருளாதாரத்தையும் அதன் சட்ட விதி முறைகளையும், கேலிப் பொருளாக்கும் அய்யம்பாளையம் சம்பவம் போன்றவற்றின்மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்து வரும் தேசிய அமைப்புகளின் அணுகுமுறை வேதனை அளிப்பதாகும். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் பார்த்து அறிந்துகொண்டிருக்கும் நாட்டு மக்கள், உரிய நேரத்தில் தக்க தீர்ப்பை வழங்குவதற்குச் சிறிதும் தயங்கமாட்டார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *