tஅவமதிப்பு வழக்கு: மன்னிப்பு கேட்காத ராகுல்

public

மோடியை திருடர் என உச்ச நீதிமன்ற தீர்ப்போடு இணைத்துக் கூறிய விவகாரத்தில் ராகுல் காந்தி மீண்டும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் வழக்கில் சீராய்வு மனுவில் இணைக்கப்பட்ட ஆவணங்களையும், இந்து பத்திரிகையில் வெளியான ஆவணங்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 10ஆம் தேதி கூறியதை இணைத்து, உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியை திருடர் என்று கூறிவிட்டது என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த டெல்லி எம்பி மீனாட்சி லெகி உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் உரிய பதிலளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேகத்தில் நீதிமன்றமே மோடியை திருடர் என்று சொல்லிவிட்டது என சொன்னேன் என்று ஏப்ரல் 22ஆம் தேதி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ராகுல் காந்தி கூறியிருந்தார். உச்ச நீதிமன்றம் கூறாத கருத்தைத் தெரிவித்ததற்காக வருத்தம் கோருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை.

ராகுல் காந்தியின் அந்த விளக்கத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ராகுல் காந்தியிடம் மீண்டும் விளக்கம் கேட்கப்பட்டது. இதையடுத்து இன்று (ஏப்ரல் 29) மீண்டும் ஒரு பிரமாணப் பத்திரத்தை ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இன்று தாக்கல் செய்துள்ள இந்த பிரமாணப் பத்திரத்திலும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவில்லை. மீண்டும் வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார்.

”அரசியல் லாபத்திற்காக உச்ச நீதிமன்றக் கருத்தை திரித்துக்கூறும் எண்ணம் எனக்குக் கிடையாது. உச்ச நீதிமன்றத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று இன்று தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *