Rகஜா புயலை எதிர்கொள்வது எப்படி?

public

கடலூர் மற்றும் பாம்பன் இடையே இன்று (நவம்பர் 15) மாலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் கஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயலானது, சென்னையில் இருந்து 470 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 550 கிமீ தொலைவிலும் இருப்பதாகத் தெரிவித்தது தேசிய வானிலை ஆய்வு மையம். நேற்று (நவம்பர் 14) மாலை 5 மணியளவில் இது குறித்த தகவல்களை வெளியிட்டது. அப்போது, இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் இடையே இப்புயல் 80-90 கிமீ வேகத்தில் கரையைக் கடக்கும் என்றும், இதன் வேகம் 100 கிமீ வரை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டது.

இதனால் தமிழகத்திலுள்ள கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களும், புதுச்சேரியிலுள்ள காரைக்கால் மாவட்டமும் கடும் பாதிப்படையும் என்று கூறப்படுகிறது. இதனால் அம்மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

“வேயப்பட்ட கூரை ஓடுகளின் மேல்பகுதியும், தகரத்தினால் செய்யப்பட்ட மேற்கூரைகளும் பெருமளவில் பாதிப்படையும். மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகள் பாதிப்புக்குள்ளாகும். மண் சாலைகள் அதிகளவிலும், தரமான தார் சாலைகள் சிறிதளவிலும் பாதிக்கப்படும். மரங்களின் கிளைகள் உடைந்து விழும். நெற்பயிர்கள், வாழை மற்றும் பப்பாளி மரங்கள் மற்றும் பழத் தோட்டங்கள் சேதத்துக்கு உள்ளாகும். கரையோரப் பகுதிகளில் ஏற்படும் அரிப்பினால் கடல் நீர் தாழ்வான பகுதிகளுக்குள் புகும்” என்று தேசிய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

**நாம் செய்ய வேண்டியது**

வதந்திகளைக் கண்டு பயப்பட வேண்டாம்

மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும்

மொபைலில் எஸ்எம்எஸ் செய்து தகவல் தொடர்பை மேற்கொள்ளலாம்

உங்களது சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை நீர்புகா பைகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்

அவசரக்கால உதவிக்கான உபகரணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

வீட்டில் ரிப்பேரான பொருட்களைச் சரி செய்ய வேண்டும்; முக்கியமாக, கூரான பொருட்களைக் கவனிக்க வேண்டும்.

கால்நடைகளைக் கட்டாமல், அதேநேரத்தில் பாதுகாப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மின்சார இணைப்புகள், சமையல் எரிவாயுவை ‘ஆஃப்’ செய்து வைக்க வேண்டும்

ஜன்னல், கதவுகளை இறுகச் சாத்தி வைத்திருக்க வேண்டும்

வானொலியில் அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புகளைக் கேட்டு, அவற்றைச் செயல்படுத்த வேண்டும்.

கொதிக்கவைத்த நீரைப் பருக வேண்டும்.

வீடு பாதுகாப்பானதாக இல்லையென்றால், புயலுக்கு முன்னதாகவே பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும்.

சிதைந்த கட்டடங்களில் தஞ்சம் புக வேண்டாம்

உடைந்த மின்கம்பங்கள், மின் இணைப்புகள், கூரான பொருட்களிடம் இருந்து ஜாக்கிரதையாக விலகியிருக்க வேண்டும்

**அதிகாரி வேண்டுகோள்**

போதுமான அளவு குடிநீர், சார்ஜ் செய்யப்பட்ட மொபைல், பவர் பேங்குகளை வைத்திருக்க வேண்டுமென்று, நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார் பேரிடர் மேலாண்மைக்கான சிறப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி. “தகவல்தொடர்புக்கு வழியில்லாமல் மக்கள் இருக்கக் கூடாது. மீண்டும் மின்சாரம் கிடைக்க 10 மணி நேரம் வரை ஆகலாம். கூரை வீடுகள் மற்றும் தகரம் வேயப்பட்ட மேற்கூரை உடைய வீடுகளில் வசிப்பவர்கள், மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் பாதுகாப்பாகத் தங்கலாம்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *