கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு கோதுமை பரோட்டா

public

�பரோட்டா, பொரட்டா, பரத்தா, புரோட்டா, ப்ரோட்டா இப்படி நீங்க சொல்ற எதுவா இருந்தாலும் அதுவாவே வச்சுக்கோங்க. ஆனால் அந்த ருசி இருக்கே… அதுக்கு இணை, அதேதான். அப்படிப்பட்ட பரோட்டா பிரியர்களுக்கு ஹெல்த்தியான இந்த உருளைக்கிழங்கு கோதுமை பரோட்டா செய்து கொடுங்கள். இதன் சுவைக்கு மேலும் அடிமையாவார்கள்.

**என்ன தேவை?**

கோதுமை மாவு – ஒரு கப்

வேகவைத்த உருளைக்கிழங்கு – ஒரு கப்

நறுக்கிய பச்சை மிளகாய் – 2

உலர்ந்த மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) – அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் அல்லது நெய் தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்குடன் மற்ற பொருள்களைக் கலந்து நன்கு பிசிறி வைக்கவும். கோதுமை மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டி, அதில் உருளைக்கிழங்கு மசாலா கலவையை வைத்து சின்ன சின்னதாகத் தட்டி வைத்துக்கொள்ளவும். சூடான தவாவில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி பரோட்டாவாகச் சுட்டெடுக்கவும்.

**[நேற்றைய ரெசிப்பி: பனீர் சீஸ் கோதுமை பரோட்டா](https://www.minnambalam.com/public/2021/08/04/1/paneer-cheese-wheat-parotta)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *