Nலாரா மருத்துவமனையில் அனுமதி!

public

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் புகழ்பெற்று விளங்கிய காலகட்டத்தில் அவருக்கு இணையாக பார்க்கப்பட்டவர் பிரையன் லாரா. கிரிக்கெட்டில் தனி நபர் சாதனைகள் பல புரிந்த லாரா அணியையும் சிறப்பாக வழிநடத்தினார்.

ஓய்வுக்குப் பின் லாரா கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டுவருகிறார். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்டார் கிரிக்கெட் சேனலுக்காக கிரிக்கெட் வர்ணனை செய்துவரும் இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் பரேல் நகரில் உள்ள குளோபல் மருத்துவமனையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மதியம் 12.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தை முன்னிட்டு அவர் இங்கிலாந்து சென்றிருந்தார். பின் மீண்டும் இந்தியா திரும்பினார்.

லாரா இன்று தான் தங்கியிருந்த ஹோட்டலில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது நெஞ்சுவலி ஏற்பட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மராத்திய நாளிதழ் லோக்சட்டா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குளோபல் மருத்துவமனையில் டாக்டர் பிரவீன் குல்கர்னி லாராவை பரிசோதித்துள்ளார். முதற்கட்டமாக ஆஞ்சியோகிராபி சோதனைக்கு பரிந்துரைத்துள்ளார்.

லாரா 131 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 11,953 ரன்களும், 299 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 10405 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்களும், 48 அரை சதங்களும், ஒருநாள் போட்டியில் 19 சதங்களும் 63 அரைச் சதங்களும் அடித்துள்ளார்.

அண்மையில் [லாரா](https://minnambalam.com/k/2019/06/21/64) தற்போதைய இந்திய பேட்ஸ்மேன்களில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக நுணுக்கமான ஆட்டத்திறனை வெளிப்படுத்துபவர் லோகேஷ் ராகுல் என புகழ்ந்து பேசியிருந்தார்.

**

மேலும் படிக்க

**

**[திமுக வேட்பாளர் தேர்வில் முறைகேடு: ஓஎம்ஜியில் களையெடுத்த ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/25/57)**

**[மோடிக்கு எதிரான கருத்தை வெளியிட்டால் உயிருக்கு ஆபத்து: தேர்தல் ஆணையம்](https://minnambalam.com/k/2019/06/25/34)**

**[’நான் விஸ்வரூபம் எடுத்தால்…’ – தினகரனைத் தாளிக்கும் தங்கம்](https://minnambalam.com/k/2019/06/25/31)**

**[டிஜிட்டல் திண்ணை: தங்கத்தை தூக்கிய தங்கமணி- பழனியப்பனை தூக்கும் வேலுமணி](https://minnambalam.com/k/2019/06/24/71)**

**[நீட் கோச்சிங் சென்டர்களின் வருமானம் இவ்வளவா?](https://minnambalam.com/k/2019/06/25/23)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *