nமட்டன் ஹலீம் – சென்னையின் 5 பெஸ்ட் இடங்கள்

public

தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து வருகிறார்கள். மாலை நோன்பு திறப்பு முடிந்தபின் உட்கொள்ளும் உணவுகளில் ஹலீம் ஒரு முக்கிய இடத்தை பிடித்துக்கொள்ளும். குடும்பத்தை விட்டுவந்து மேன்ஷனில் தங்கி வேலை செய்பவர்களுக்கு, இந்த நோன்பு காலத்தில் உணவகங்கள் ஸ்பெஷலாக சலுகை விலையில் ஹலீமுடன் கூடிய ‘இஃப்தார் பாக்ஸ்கள்’ விற்பதுண்டு.

அப்படி சென்னையில் நல்ல ஹலீம் கிடைக்கும் இடங்கள் என்று பார்த்தால் திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி வாசலில் உள்ள ‘ஹலீம் எக்ஸ்பிரஸ்’ (துரைப்பாக்கத்திலும், காரப்பாக்கத்திலும் உள்ளன), வேளச்சேரி ஹஜிராஸ் கிச்சன், எழும்பூர் சேட் காலனியில் உள்ள பிஷ்ஸர்மேன் ஃபேர், காரப்பாக்கம் ராசவித், துரைப்பாக்கம் மக்ஸ் பிரியாணி சென்டர் ஆகியவற்றை சொல்லலாம். இவை அனைத்திலும் மேன்ஷன்வாசிகளாக இருக்கும் ஐடி மற்றும் தனியார்துறை இஸ்லாமிய இளைஞர்கள் பயன்பெறும்வண்ணம் நியாயமான விலையில் ஹலீமுடன் கூடிய இஃப்தார் பாக்ஸ் கிடைக்கிறது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *