nகிச்சன் கீர்த்தனா: வெண்பூசணி கேரட் சாலட்

public

H

உடல் எடையைக் குறைக்க

‘Salata’ என்ற லத்தீன் வார்த்தைக்கு ‘உப்புச் சுவை’ என்று பொருள். பிரெஞ்சு வார்த்தையான Salate என்பதற்கும் அதுவே அர்த்தம். உப்புச் சுவையைக் குறிக்கும் இந்த வார்த்தையில் இருந்தே ‘Salad’ என்ற சொல் பிறந்திருக்கலாம். 14ஆம் நூற்றாண்டில் ‘Salaet’ என்ற ஆங்கில வார்த்தை புழக்கத்திலிருந்தது. பிறகே அது ‘Salad’ என்று மருவியிருக்கலாம். Salad Days என்ற பதத்தை ஷேக்ஸ்பியர் உபயோகித்திருக்கிறார். அதன் பொருள் ‘இளமையான நாட்கள்’. சாலட்டில் உள்ள பசுமையான நிறம் இங்கே இளமையைக் குறிக்கிறது.

**என்ன தேவை?**

வெண்பூசணித் துருவல் – ஒரு கப்

வெள்ளை மிளகுத் தூள் – கால் டீஸ்பூன்

கேரட் துருவல் – கால் கப்

இந்துப்பு – கால் டீஸ்பூன்

எலுமிச்சைப்பழம் – அரை மூடி (சாறு பிழியவும்)

**எப்படிச் செய்வது?**

பூசணித் துருவலுடன், கேரட் துருவல், மிளகுத் தூள், இந்துப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

**என்ன பலன்?**

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளைக் காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணியை அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியைத் தக்கவைக்கும். பூசணிக்காய், கேரட்டை விரும்பி சாப்பிடுபவர்களுக்குக் கண் பார்வை சிறப்பாக இருக்கும். உடலில், ரத்தத்தில் உள்ள நச்சுகள் சிறுநீரகம் மூலம் வெளியேறுவதால் இந்த சாலட் சாப்பிட்டால் உடல் லேசானதுபோல உணரலாம்.

[நேற்றைய ரெசிப்பி: வெஜ் சாலட்](https://www.minnambalam.com/k/2019/04/25/3)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *