Nஐஆர்சிடிசியின் சிறந்த சலுகை!

public

ஐஆர்சிடிசி சேவை மூலம் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் உடனடியாக கட்டணத்தை செலுத்தவேண்டியதில்லை என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் லிமிடெட் சார்பில் நெடுந்தூரம் செல்லும் பயணிகளுக்காகச் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘buy tickets now and pay later(ePayLater)’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. விரைவு ரயில்களில் பயணம் செய்ய விரும்புவோர் 5 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் .இதற்கான கட்டணத்தை அடுத்த 14 நாட்கள் கழித்து 3.5 சதவிகித சேவை வரியுடன் சேர்த்து செலுத்தினால் போதும் என்று ஐஆர்சிடிசி செய்தித் தொடர்பாளர் சந்தீப் தத்தா இன்று ஜூன்-1 ஆம் தேதி தெரிவித்துள்ளார். அதாவது முன்பதிவு செய்யும் போதே கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தை மும்பையைச் சேர்ந்த ஃபிண்டெக் நிறுவனத்துடன் ஐஆர்சி.டிசி.யும் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது.

டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கட்டணம் செலுத்தும் வேளையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகத் தொடர்ந்து ரயில்வே துறைக்கு வந்த புகாரையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இபேலேட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஆக்ஷத் சக்ஸ்சேனா கூறியதாவது,” இபேலேட்டர் (ePayLater) சேவை மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வது மிக எளிமையாக இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்கள் பெயர், ஈமெயில் ஐடி, மொபைல் எண், பான் அட்டை அல்லது ஆதார் விவரங்களைத் தெரிவித்து இந்தச் சலுகையை பெறலாம். ஆனால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பணம் செலுத்தத் தவறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *