_அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உத்தரவு!

Published On:

| By Balaji

தமிழகத்தின் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.

இதுகுறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த வைரசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று தாக்கல் செய்ந்திருந்தார். அதில், “ தமிழகத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் அனுமதி பெற்றும், பெறாமலும் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளில், கட்சிகள், அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மாலை அணிவிக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேசமயம், சிலைகளை யாராவது சேதப்படுத்தினால், சமூக ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் அனுமதி பெற்று வைக்கப்பட்ட அனைத்து சிலைகளின் அருகில் இருக்கும் ஏணிகளை அகற்றவும், அனுமதி பெறாத சிலைகளை உடனடியாக அகற்ற உத்தரவிடவும், புதிதாக சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று(ஏப்ரல் 19) நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அமர்வு விசாரித்தது. 2016 மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின்படி அனுமதி பெறாத சிலைகளை அகற்றுவதற்கு வழிவகை உள்ளது. அதன்படி, அனுமதி இல்லாத சிலைகளை அகற்றப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற, தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

**வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share