jஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறாதா?

public

மாறிவரும் உலகச் சூழலில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் தேவைப்படுகிறது என்று திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று ஆகஸ்ட் 5ஆம் தேதி பேசினார்.

மாநிலங்களவையில் அவர் ஆற்றிய உரையில்… “இந்தியா உலகத்தின் ஒரு பெரிய நாடு. இன்று மாறிவரும் சூழலில் அதற்கேற்றது போல, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்ளதா அல்லது பெரிய முடிவுகளை எடுக்காமல் பாதுகாப்பாக இருப்பது என்ற முடிவில் இருக்கிறோமா? நமது வெளியுறவுக் கொள்கைகளை இந்தியப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களின் எண்ணிக்கையை வைத்து நாம் அளவிட்டால் அது பெறும் வெற்றிதான். அவர் இந்தியாவுக்குப் பல புதிய நண்பர்களை பெற்றுத் தந்துள்ளார், புதிய முதலீடுகளை வரவழைத்திருக்கிறார் என்பது உண்மையே. ஆனால், பாராட்டத்தகுந்த அம்சம் இது மட்டும்தான்.

அரசு எண்ணிக்கைகளை வெளியிட்டு, பெருமைபட்டுக் கொள்ளலாம். ஆனால் யதார்த்தம் என்ன? நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளைப் பாருங்கள். பாகிஸ்தான் முன்பிருந்ததைவிட, கடினமான நிலைபாடுகளை எடுக்கிறது. இதன் காரணம் என்ன? இதற்கு நாம் காரணமா அல்லது நமக்கு எதிராக தீவிரமான நிலைபாடுகளை எடுக்கும்படி யாராவது பாகிஸ்தானை நிர்பந்திக்கிறார்களா? நேபாளத்தைப் பாருங்கள். நேபாளத்தில் ஏற்படும் தடைகளுக்கு அம்மக்கள் நம்மை குறை சொல்கிறார்கள். நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் கலாசார ரீதியாக பல தொடர்புகள் உள்ளன. ஆனால், இன்று என்ன நடக்கிறது? நேபாளத்தில் பொருளாதார தடை விதிக்கையில், பெட்ரோல் டீசலின் விலை 5 முதல் 10 மடங்கானது. சமீபத்தில் காத்மண்டு சென்று வந்த எனது நண்பர், இந்தியாவின்மீது அம்மக்களுக்கு கடுமையான கோபம் உள்ளது என்று தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியை அவர்களுடைய அணியாக எண்ணி உற்சாகமடையக் கூடியவர்கள் நேபாள மக்கள். ஆனால், அந்த காலம் முடிந்து விட்டது. தற்போது, இந்தியாவுக்கு எதிராக விளையாடும் அணி எந்த அணியாக இருந்தாலும் அந்த அணியை ஆதரிக்கிறார்கள். இது ஒரு சாதாரண உதாரணமாக இருக்கலாம். ஆனால், இது அவர்களுக்கு நம்மீது உள்ள கோபத்தின் தீவிரத்தை இது உணர்த்துகிறது. பங்களாதேஷில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த முறை தேர்தலில் பங்கேற்றால் என்ன நடக்கும்?

இந்தியா இஸ்ரேலோடு நெருக்கமாவதை யாரும் குறை கூற முடியாது. ஆனால், திடீரென்று ஏன் பாலஸ்தீனத்தை புறக்கணிக்கிறோம்?

இலங்கையை எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை தொடர்பாக நமக்கு விரிவான திட்டங்கள் இருக்கின்றனவா? இன்று சீனா, இலங்கை முழுக்க கால் பதித்துள்ளது. அது தமிழகத்துக்கு மட்டும் ஆபத்தானதில்லை. இந்தியாவுக்கே அது ஆபத்தானது. இலங்கையில் தமிழர்கள் போர் நடந்த சமயத்தில் கொல்லப்பட்டபோது நாம் அதை கண்டு கொள்ளவில்லை. இன்றுவரை அது குறித்து பேசாமல்தான் இருக்கிறோம்.

இந்திய – அமெரிக்க உறவுகளை எடுத்துக்கொண்டால் அது எப்போதுமே ஒரு வழிப்பாதையாகவே இருந்து வந்திருக்கிறது. அமெரிக்க அரசின் கொள்கைகள், நமது சந்தையைத் திறக்க வேண்டும் என்கிறபோது, அவர்களின் சந்தையைத் திறக்க மறுக்கிறார்கள். எச்1பி விசா விவகாரமாக இருக்கட்டும். வழக்கமான அமெரிக்க தந்திரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு நான்காண்டுகள் ஆகிவிட்டன. 2017இல் இருக்கிறோம். நாம் என்ன நிலைபாடு எடுக்கப் போகிறோம் என்பதை முடிவெடுக்க வேண்டும். அந்த அமைப்பின் நெருக்குதலுக்குக் கட்டுப்பட்டு நம் விவசாயிகளுக்கான மான்யத்தை ரத்து செய்யப் போகிறோமா? என்ன தீர்வு காணப் போகிறோம்? குறைந்தபட்ச விலையை ரத்து செய்யப்போகிறோமா? உலகச் சந்தையின் நிர்பந்தத்துக்குக் கட்டுப்படப் போகிறோமா?” என்று பேசினார் கனிமொழி எம்.பி.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *