jஇந்தியப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு!

public

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் என்று கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி – மார்ச் காலாண்டில் பண மதிப்பழிப்பு நடவடிக்கை எதிரொலியாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவிகிதமாக இருந்தது. அதன் தாக்கம் சீராகியுள்ளதால் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 6.5 சதவிகித வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். ராபி பருவ விதைப்பு சிறப்பாக இருந்ததால் வேளாண்துறை 3.5 முதல் 4 சதவிகிதம் வரையிலான வளர்ச்சியை அடையும் என்று எதிர்ப்பார்க்கிறோம். உற்பத்தித்துறைக்கான மதிப்புக்கூட்டு 4.5 முதல் 5 சதவிகிதம் வரையில் இருக்கும்.

மின்சாரத்துறை வளர்ச்சி 7 சதவிகிதமாகவும், சுரங்கத்துறையின் வளர்ச்சி 3 சதவிகிதமாகவும், வர்த்தகம், ஹோட்டல் மற்றும் போக்குவரத்துத்துறைகள் 7 சதவிகிதமாக வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியப் பொருளாதாரம் 6.1 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று இக்ரா ஆய்வு நிறுவனமும், 6.6 சதவிகிதமும் வளர்ச்சியடையும் என்று நோமுரா நிறுவனமும் தங்களது ஆய்வறிக்கைகளில் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *