Iவளரும் இந்திய இணையச் சந்தை!

public

qஇந்தியாவின் இணையச் சேவைகள் மதிப்பு 2022ஆம் ஆண்டுக்குள் 124 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என்று ஆய்வு ஒன்றில் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பு சார்பாக இணையச் சேவைகள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இ-டெயில், ஃபிண்டெக், ஃபுட் டெக், டிஜிட்டல் கிளாசிஃபைட்ஸ், டிஜிட்டல் விளம்பரங்கள், மின்னணு பயண சேவை மற்றும் டிக்கெட் புக்கிங் உள்ளிட்டவற்றை அடக்கிய இந்தியாவின் இணையச் சேவைகள் சந்தை மதிப்பு 33.8 பில்லியன் டாலராக உள்ளது. அதன் மதிப்பு 2022ஆம் ஆண்டுக்குள் 76.4 பில்லியன் டாலராக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சந்தையின் மதிப்பு 124 பில்லியன் டாலராக உயரவும் வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கான சில கடினமான காரணிகளை இத்துறையினர் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அரசின் கொள்கை மாற்றங்கள், சிறந்த கட்டுமான வசதிகள், பரந்த இணையச் சேவை, மேம்பட்ட இணைய விநியோகம் உள்ளிட்ட அம்சங்கள் வாயிலாக இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் சிறப்பான சேவை வழங்க முடியும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் பல்வேறு சேவைகளின் கீழ் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல, இணையம் சார்ந்த பொருட்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இணையச் சேவையின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவினாலும் அவை இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்படவில்லை.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *