iபிக் பாஸ் : விஜய் டிவி பங்கு அதிகரிப்பு !

public

பிக் பாஸ்”, தற்போது தமிழகத்தில் அனைவராலும் விவாதிக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்வு. நடிகர் கமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நெறியாளராகப் பங்குபெறுவது இதுவே முதல் முறை. நாற்பது நாட்களை கடந்துவிட்ட “பிக் பாஸ்” நிகழ்ச்சி விஜய் டிவியின் பார்வையாளர்களுக்கான ‘மார்க்கெட் ஷேர்’ மதிப்பில் புதிய உச்சத்தைத் தொட உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு சேனலான ‘ விஜய்’ தொலைக்காட்சியில் 25 ஜூன், 2017 முதல் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த நான்கு வாரங்களில் விஜய் தொலைக்காட்சியின் பார்வையாளர்களுக்கான மார்க்கெட் ஷேர் பத்து சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று அனைத்து தொலைக்காட்சிகளின் பார்வையாளர்களுக்கான மார்க்கெட் ஷேர் குறித்த, புள்ளிவிவரம் பட்டியலாக (BARC Data)கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. கடந்த நான்கு வாரங்களாக வெளிடிடப்பட்ட BARC புள்ளிவிவர கணைக்குப்படி, “விஜய் டிவியில், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானதில் இருந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததோடு அதன் மார்க்கெட் ஷேர் பத்து சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் சன் டிவியின் மார்க்கெட் ஷேரில், விகிதாசார அளவில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் முதல் முறையாக சன் டிவி, தமிழ் பொழுதுபோக்கு சேனல்களுக்கான புள்ளிப்பட்டியலில் ஐம்பது சதவிகிதத்துக்கும் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவி மட்டுமல்லாது ஸ்டார் நிறுவனத்துக்குச் சொந்தமாக தெலுங்கில் ஒளிபரப்பாகும் ‘மா டிவி’யின் மார்க்கெட் ஷேர் சதவிகிதமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது”.

தென்னிந்திய மொழிகளுக்கான பொழுதுபோக்கு ஊடகங்களிலேயே சன் டிவி, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 55-60 சதவிகிதம் பார்வையாளர்களுக்கான மார்க்கெட் ஷேரினை சராசரியாகப் பெற்று முதல் இடத்தில் இருந்தது. மேலும் தமிழ் பொழுதுபோக்கு ஊடகங்களைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 – 15 சதவிகிதத்தினை சராசரியாகப் பெற்று இரண்டாவது இடத்தில் ஸ்டார் விஜய் டிவியும், அதே நேரத்தில் சராசரியாக 5 சதவிகிதம் பெற்று ‘ஜீ தமிழ்’ மூன்றாவதாகவும் இருந்தன. இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் 2016 ஆம் நிதி ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்டவை. ( ஜீ தமிழ் டிவியின் பங்கு கடந்த 15 மாதங்களில் 5% லிருந்து 14% வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது).

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் சன் டிவி 58%, விஜய் டிவி 17%, ஜீ தமிழ் 14 % பங்குகளைப் பெற்றிருந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது முதல் விஜய் டிவியின் பங்கு வெகுவாக அதிகரித்துள்ளது.

கடந்த (ஏப்ரல் – ஜூன் 2017) காலாண்டில் BARC அடிப்படையிலான தொலைக்காட்சிகளின் புள்ளிவிவரங்கள் :

முதல் வரம் : சன் டிவி 54% விஜய் டிவி 20% ஜீ தமிழ் 15%

இரண்டாவது வரம் : சன் டிவி 53% விஜய் டிவி 22% ஜீ தமிழ் 14%

மூன்றாவது வரம் : சன் டிவி 51% விஜய் டிவி 25% ஜீ தமிழ் 14%

நான்காவது வரம் : சன் டிவி 50% விஜய் டிவி 26% ஜீ தமிழ் 13%

இந்தப் புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானதில் இருந்து ஜீ தமிழ் டிவியின் பங்குகளில் பெருமளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் சன் டிவியின் பங்கு மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் நேரம். இரவு 9 மணியிலிருந்து 11 மணி வரையில் பிக் பாஸ் ஒளிபரப்பாகிறது. இந்த நேரங்களில் சன் டிவியில் தொடர் நாடகங்களே ஒளிபரப்பாகி வந்தன. அந்த நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களில் பெரும்பாலானோர் பிக் பாஸ் பார்க்க தொடங்கியதே இந்த பெரும் சரிவிற்குக் காரணம்.

கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் நிறுவனம், பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவரிடமும் பெரும் ஆர்வத்தை உண்டாக்கக் காரணமாக குறிப்பிடுவது ” திரையுலகில் வலுவான தடம் பதித்துள்ள கமல் இந்த நிகழ்ச்சியின் நெறியாளராக இருப்பது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களிடையே உண்டான மோதல் போக்கு மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்”. இவையெல்லாம் பிக் பாஸ் இந்த அளவுக்கு வளரக் காரணம் என்கிறது.

தமிழக பொழுதுபோக்கு ஊடகங்களைத் தொடர்ந்து கண்காணித்துவரும் முன்பையை சார்ந்த நிறுவனம் “விஜய் டிவியின் மார்க்கெட் ஷேர் அதிகரிப்பு என்பது தற்காலிகமானது, விரைவில் இரக்கத்தைச் சந்திக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சியை உன்னிப்பாகக் கவனித்தல், நடிகை ஓவியா இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்துவந்தார். அவரை ஆதரிக்கும் விதமாகப் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவந்தனர். தற்போது அவரும் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதால் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்தப் பங்கு சரிவு குறித்து சென்னையில் சன் டிவிக்கான திட்டகுழு கூறியதாவது : “பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் பார்வையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுன் வகையில் சன் டிவியின் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. தற்போதைய இந்தச் சூழல் தர்களிகமனதே. சன் டிவி தென்னிந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வலுவான நிலையில் தான் உள்ளனர். இப்போது கூட, மாலையில், ‘ப்ரைம் டைம்’ நேரங்களில் தங்களது விளம்பரங்களை சன் டிவியில் ஒளிபரப்பவே விளம்பரதாரர்கள் விரும்புகிறார்கள். மேலும், வரும் காலங்களில் சன் குழுமத்தின் சந்தை பங்கைப் பாதுகாக்க, முதலீடுகளை அதிகரிக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு :

சன் டி.வி. அதன் பார்வையாளர்களின் விருப்பங்களை நிறைவேற்றுன் வகையில்தான் நிகழ்ச்சிகளை வழங்குகிறது. பிக் பாஸ் என்ற ஒரு நிகழ்ச்சியால் மட்டும் சன் டிவியின் சந்தைப் பங்கு மதிப்பை தொடர்ச்சியாகக் குறைத்துவிட முடியாது. இந்த நிதியாண்டின் ‘இரு காலாண்டுகளின் போக்குகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மார்க்கெட் ஷேரை அனுமானம் செய்ய முடியாதுசார்ந்த,” என்று சென்னையை சாந்த ஊடகங்களுக்கான திட்டங்களை வரையறை செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது .மேலும் ‘பிக் பிரதர்ஸ்’ என்று டச்சு நாட்டில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றதோடு கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகத் தமிழ் மக்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அதில் வெற்றிகண்டிருப்பது ஒரு தைரியமான செயல் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டுக்குள் தமிழ் பொழுதுபோக்கு ஊடக சந்தையில், வயாகாம் 18 நிறுவனத்தின் ‘கலர்ஸ் தமிழ்’ சேனல் நுழைய உள்ளது. அதன் தமிழ் நுழைவுக்கு முன்னதாக ஸ்டார் நிறுவனம் தமிழ் சந்தையில் அதன் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியினை அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது.

நன்றி : தி இந்து�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *