Hசரிவடைந்த தங்கம் பயன்பாடு!

public

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 12 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2017ஆம் ஆண்டின் ஜனவரி – மார்ச் மாதங்களில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 131.2 டன்னாக இருந்தது. ஆனால், 2018ஆம் ஆண்டின் ஜனவரி – மார்ச் காலாண்டில் அது 12 சதவிகிதம் சரிந்து 115.6 டன்னாகக் குறைந்துள்ளது. மதிப்பு அடிப்படையிலும் 8 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது தங்கத்துக்கான தேவை மதிப்பு ரூ.34,440 கோடியிலிருந்து ரூ.31,800 கோடியாகக் குறைந்துள்ளது. தங்கத்துக்கான தேவை குறைவில் அதன் விலை உயர்வு முக்கியக் காரணமாக உள்ளது. குறிப்பாக (முகூர்த்த) பண்டிகை தினங்கள் குறைவாக இருந்தது இந்தச் சரிவுக்குக் காரணமாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்துக்கான இறக்குமதி உயர்வு குறித்த எதிர்பார்ப்பு மற்றும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு மாறுவதில் அமைப்பு சாரா துறையில் இருந்த சிக்கல்கள் ஆகியனவும், தங்கத்துக்கான தேவையைப் பெருமளவில் குறைத்துள்ளன. அட்சய திருதியை தினத்தன்று தங்கத்துக்கான தேவை பொதுவாகவே மிக அதிகமாக இருக்கும். ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த நிதி மோசடியால் அட்சய திரிதியை வரையில் மக்களிடையே நகை வாங்குதற்கான நம்பகத்தன்மை குறைந்திருந்தது. இதனால் ஜனவரி – மார்ச் காலாண்டில் நகைகளுக்கான தேவையும் 12 சதவிகிதம் குறைந்து 87.7 டன்னாக இருந்தது. 2017ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் நகைகளுக்கான தேவை 99.2 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *