fப்ரோ கபடி: விட்டுக் கொடுக்காத ஹரியானா!

public

ராஞ்சியில் நடைபெற்ற ப்ரோ கபடி தொடரின் 87-வது லீக் ஆட்டத்தில், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, முதல் ரைடிலயே போனஸ் புள்ளியுடன் ஆட்டத்தைத் துவங்கியது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த மஞ்சித் அருமையாக தடுப்பாட்டம் ஆடி அந்த அணிக்கு முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார். முதல் 10 நிமிடத்தில் ஹரியானா அணி 6-5 என முன்னிலையில் இருந்தது. பரபரப்பாகச் சென்ற ஆட்டம் முதல் பாதியில் 12-12 என சமனில் முடிந்தது. இரண்டாம் சுற்றில் இரு அணிகளும் தடுப்பாட்டத்திலேயே கவனம் செலுத்தின. 28வது நிமிடத்தில் ஜெய்ப்பூர் அணியை ஆல்அவுட் செய்து ஹரியானா அணி, 24-16 என முன்னிலை பெற்றது. கடைசி நிமிடங்களில் ஹரியானாவின் தடுப்பாட்டத்திற்கு முன்னால் ஜெய்ப்பூர் அணி வீரர்களால் புள்ளிகள் பெற முடியவில்லை. இறுதியில் 30-26 என ஹரியானா வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாசிர் சிங் 8 புள்ளிகள் பெற்றார். இதுவரை 17 போட்டிகள் விளையாடிய ஹரியானா அணி, 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 54 புள்ளிகளுடன் தொடர்ந்து 2ஆம் இடத்தில் நீடிக்கிறது.

88-வது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி, உத்தரபிரதேஷ் யோத்தா அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய யூபி அணி, பாட்னா அணியை முதல் பாதிக்குள் இரண்டு முறை ஆல் அவுட் செய்தது. இதனால் முதல் பாதி முடிவில் 27-15 என முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியிலும் யூபி அணியின் ஆதிக்கம் தொடர, இறுதியில் 46-41 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. அதிகபட்சமாக யூபி அணியின் நிதின் 16 புள்ளிகள் பெற்றார். இந்தத் தோல்வி பாட்னா அணியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அந்த அணி 60 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

**இன்றைய ஆட்டங்கள்:**

தபாங் டெல்லி – யூ மும்பா (மும்பை) (இரவு 8 மணி),

பெங்களுரு புல்ஸ் – பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *