dகாயமடைந்த இளைஞருக்கு கமிஷனர் ஆறுதல்!

public

சென்னையில் உதவி ஆய்வாளர் தாக்கியதால் காயமடைந்த இளைஞரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

சென்னை சூளைமேடு மங்களாபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ஹாருண் சேத். தனியார் கல்லூரியொன்றில் இளங்கலை மூன்றாமாண்டு படித்து வருகிறார். கடந்த 19ஆம் தேதியன்று ஒரு திருமணத்துக்குச் சென்றுவிட்டு, நள்ளிரவில் தன் நண்பர்களுடன் வீடு திரும்பினார் ஹாருண். அப்போது, சேத்துப்பட்டு அருகே ஸ்பர்டங் சாலை சந்திப்பில் உதவி ஆய்வாளர் இளையராஜா மற்றும் அவருடன் பணியாற்றிய காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியே வந்த முகமது ஹாரூணையும் அவரது நண்பர்களையும் வாகனச் சான்றுகள் காட்டச்சொல்லிக் கேட்டுள்ளனர்.

ஹாரூண் தனது வாகனத்திற்கான ஆவணங்களைக் காட்டியபின்பும், அவர் அங்கிருந்து செல்ல இளையராஜா அனுமதிக்கவில்லை. அதோடு, அவருடன் வந்த நண்பர்களிடம் போலீசார் பணம் வாங்கினர். இதுபற்றிக் கேட்டபோது, இளையராஜாவும் அவருடன் இருந்த காவலர்களும் முகமது ஹாரூணைத் தாக்கினர். அவரை எச்சரித்து அனுப்பினர்.

இந்த தாக்குதலில் காயமடைந்ததால், ஹாரூணால் அந்த இடத்திலிருந்து நகர முடியவில்லை. செல்போனில் தனது உறவினர்களை அழைத்து, அவர்களை அங்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார் ஹாரூண் . அவர்கள் வந்தபின்பு, ஒரு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். நடந்த சம்பவம் குறித்து, அவர் சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவையும் அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, உதவி ஆய்வாளர் இளையராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், சமீபத்தில் சிகிச்சை பெற்றுவரும் முகமது ஹாரூண் வீட்டுக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்த சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *