bகும்கியாக சின்னத்தம்பி யானை: வழக்கு!

public

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் தேதியன்று கோவை வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி யானை, தமிழக வனத் துறையினரால் மீட்கப்பட்டு டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதியில் விடப்பட்டது. அதன்பின், ஜனவரி 31ஆம் தேதியன்று பொள்ளாச்சி அருகேயுள்ள அங்கலக்குறிச்சி எனும் கிராமத்துக்குள் புகுந்தது சின்னதம்பி யானை.

இப்போதும் அப்பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் சின்னதம்பி சுற்றி வருகிறது. சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். விலங்கு நல ஆர்வலர்கள் உள்படப் பலரும் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்கு நல ஆர்வலர் அருண் பிரசன்னா மேல்முறையீடு செய்துள்ளார். யானைகளை வேறு இடத்துக்குக் கொண்டு செல்வது குறித்து விதிகள் வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதில் முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 4) பிற்பகலில் நீதிபதிகள் சுப்பிரமணிய பிரசாத், மணிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *