bஅட்ச்சி புட்ச்சி: தமனின் ரீஜெனரேஷன்!

public

சமீப காலங்களாக இசை ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சோதனை, எந்தப் பாடலைக் கேட்டாலும் ஏற்கெனவே கேட்டது போலவே இருப்பது. அது எந்தப் பாடல் எனக் கண்டுபிடிப்பதற்குள் பிளே லிஸ்ட்டிலிருந்து அந்தப் பாடல் காணாமல் போய்விடுகிறது. நேற்று வெளியான விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்துக்கு தமன் இசையமைத்திருக்கும் ‘அட்ச்சி புட்ச்சி’ பாடலைக் கேட்டபோதும் அப்படியே தோன்றியது.

தெலுங்கில் ஹிட் கொடுக்கும் பாடல்களின் மெட்டுகளை மாற்றி தமிழில் எனெர்ஜிட்டிக்காகக் கொடுப்பது தமனின் வழக்கம். அப்படி அவரது தெலுங்குப் படப் பாடல்களைத் தேடிச்சென்றபோது, தமிழ்ப் படத்திலேயே கிடைத்தது. பிரசாந்த் நடித்த சாகசம் திரைப்படத்தின் ‘டெசி கேர்ள்’ பாடலிலிருக்கும் ‘டெசி டெசி டெசி கேர்ள்’ என்ற வரியை எடுத்து இதில் இசைக்கருவிகளின் இசையாக மாற்றியிருக்கிறார். பழைய இசையையே மீட்டுக்கொணர்ந்தாலும், அதையும் புதிய விதத்தில் கொடுக்கும் திறமையை தமனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

முழுக்க முழுக்க சென்னை மக்களுக்கே உரித்தான வார்த்தைகளிலும், அவற்றின் சப்போர்ட்டுக்காகப் பறையிசையிலும் அட்ச்சி புட்ச்சி பாடல் ஒலிக்கிறது. ஆனால், பறையை வைத்து இத்தனை மெதுவாக இசையமைக்க தமனால் மட்டும்தான் முடியுமோ எனத் தோன்றுகிறது.

[அட்ச்சி புட்ச்சி பாடல்](https://www.youtube.com/watch?v=02CtKrU-hDc)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *