9சசிகலா தப்ப முடியாது!

public

சிபிஜ விசாரணையில் இருந்து சசிகலா தப்ப முடியாது என ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.. ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரை ஓயமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா கடந்த மாதம் 19ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தக் கடிதம் தற்போது சிபிஐயின் நிர்வாக அமைப்பான பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்ப வைக்கப்பட்டுள்ளது.சசிகலா புஷ்பாவின் மனு 20 நாட்களில் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டிருப்பது, ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு ஆதரவளிப்பதாக தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பத்திரிக்கை ஒன்றிற்கு சசிகலா புஷ்பா பேட்டியளித்துள்ளார். அதில் சசிகலா கும்பலின் சதியால்தான் ஜெயலலிதா மரணமடைந்திருக்கிறார். செப்டம்பர் 22ம் தேதி எந்த சூழலில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என்பதில் தொடங்கி அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள், செலுத்தப்பட்ட மருந்துகள், இதய துடிப்பு நின்றதாகச் சொல்லப்பட்டது வரையிலும் மர்மங்கள்தான். 75 நாட்களில் நடந்த சதியை வெளிக்கொணரத்தான் சி.பி.ஐ. விசாரணை கேட்டிருக்கிறேன். என்னை விசாரிக்கும்போது பல உண்மைகளைச் சொல்வேன். சி.பி.ஐ. விசாரணையிலிருந்து சசிகலா தப்பிக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதுவரை நான் ஓயமாட்டேன்” என சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *