மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடந்த 19ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து நேற்று(மார்ச் 20) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராகவுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
**இந்திய அளவில் நிலவரம்**
இந்தியாவில் கொரோனா மீண்டும் கோரதாண்டவம் ஆட ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதும் 3 நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இந்தியாவில் இன்று(மார்ச் 21) 43,846 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று பதிவு செய்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 197 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். ஆறு மாநிலங்களில் புதிதாக கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 86.8 சதவிகிதமாக உள்ளன. இருப்பினும், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், பஞ்சாப் இரண்டாமிடத்திலும், கேரளா மூன்றாம் இடத்திலும்,சட்டீஸ்கர் நான்காம் இடத்திலும், தமிழ்நாடு ஐந்தாம் இடத்திலும், கர்நாடகா ஆறாம் இடத்திலும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**ஆவடி**
சென்னை, ஆவடியில் தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட ஆசிரியருக்கு மீண்டும் கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் ஒருவர் கடந்த 6ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். இதையடுத்து கடந்த 16ஆம் தேதி மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனது வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார்.
ஆவடி சுற்றுவட்டார பகுதியில் 101 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
�,