8மிர்னாலினியின் நகல்!

public

�கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து dubsmash என்பது பிரபலமான ஒன்று. பல்வேறு நபர்களும் திரைப்பட வசனங்களை dubsmash செய்து வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே பெரும்பாலான நபர்களின் கவனத்தையும் தன பக்கம் ஈர்த்தனர் என்றே கூறலாம். அதன் படி திரைப்படத்தின் வசனங்களை dubsmash செய்து அதன் மூலம் பிரபலமாக மாறியுள்ளார் மிர்னாலினி. dubsmash செய்வதை பொழுதுபோக்கிற்காக முதலில் தொடங்கிய மிர்னாலினி பிறகு வலைதலங்களில் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தினார். அதன் பின்னர் வலைத்தளங்களின் மூலம் பல்வேறு dubsmash-களை பதிவிட்டு வந்த இவருக்கு பல மாதங்களாக திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இருப்பினும் சில சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அதனை தவிர்த்து வந்தார் மிர்னாலினி. ஆனால் தற்போது அவரது நடிப்பில் நிழல் என்ற திரைப்படம் தயாராகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து மிர்னாலினி Behindwoods செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன் படி அவர் நகல் என்ற திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும், அது ஒரு திரில்லர் திரைப்படம் என்றும் தெரிவித்தார். மேலும் அந்த படத்தின் இயக்குநர் சுரேஷ் குமார், இசையமைப்பாளர் ஆண்டனி ஜார்ஜ் என தெரிவித்தார்.

இந்த திரைப்படம் ஒரு கதாபாத்திரத்தை மட்டும் மையமாக கொண்டு நகர்கிறது, அந்த கதாபாத்திரத்தில் தான் நான் நடிக்கிறேன் என்றும். முதல் வாய்ப்பே இப்படி அமைந்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *