பள்ளிகளை மேம்படுத்துவதில் அலட்சியம் ஏன்?: நீதிமன்றம்!

public

டாஸ்மாக் கடைகள் அமைக்க இடங்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தும் அரசு, பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அலட்சியம் காட்டுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. கட்டடம் இடிந்து மோசமான நிலையில் இருக்கும் இந்தப் பள்ளியைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று ஒன்றாம் வகுப்பு மாணவி அதிரை முத்தரசி மற்றும் அவரது தந்தை பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், “பள்ளியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டடத்தை மேம்படுத்த வேண்டும். கோயில் அருகேயிருப்பதால் பள்ளி வளாகம் பிச்சைக்காரர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரமாகப் பள்ளி வளாகம் இல்லாத நிலையில் மாணவர்களுக்கு உடல் நலமும் பாதிக்கப்படுகிறது, இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு நேற்று (செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் கடைகளுக்கான இடங்களைத் தேர்வு செய்வதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அலட்சியம் காட்டுவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோர் வரும் அக்டோபர் 16ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். முன்னதாக மாணவியும் அவரது தந்தையும், பொன்னேரி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பள்ளி சேதமடைந்திருப்பது குறித்து புகார் அளித்திருந்தனர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *