3இழப்பீடு தீர்வல்ல!

public

‘தமிழக அரசின் மெத்தனப்போக்கால் ஓர் உயிர் பலியாகி இருக்கிறது’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று (மே 6) இந்தியா முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். தமிழக மாணவர்கள் ராஜஸ்தான், கேரளா, புனே என்று பல்வேறு அலைக்கழிப்புகளுக்கு இடையே தேர்வு எழுதியுள்ளனர். நீட் தேர்வு எழுத தனது மகனை கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தால் தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த மரணத்துக்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று (மே 6) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “தமிழக அரசின் மெத்தனப்போக்கால் ஓர் உயிர் பலியாகி இருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், “கடந்த ஆண்டு நீட் தேர்வின்போது தமிழகத்தைச் சார்ந்த மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு எழுதினார்கள். இந்த ஆண்டு மாணவர்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏன் எழுந்தது என்று தெரியவில்லை, மத்திய அரசும் சிபிஎஸ்இயும் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுத கேரளாவுக்கும் ராஜஸ்தானுக்கும் சென்றதற்குத் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு இழப்பீடு கொடுப்பதோ, இரங்கல் தெரிவிப்பதோ இதற்குத் தீர்வாகாது. நீட் தேர்வைத் தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பேசுகையில், “பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு… அதையடுத்து மருத்துவம் பயில நீட் தேர்வு. இது மாணவர்களைக் கசக்கி பிழியும் தேவையற்ற சுமையாகி விட்டது. இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். சிபிஎஸ்இ நிறுவனம் தமிழக அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்பது தமிழக அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது. மாநில அரசு மெத்தனமாகவும் பலகீனமாகவும் இருந்துள்ளதை இது காட்டுகிறது” என்று திருமாவளவன் தமிழக அரசை சாடியுள்ளார்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *