sகள ஆய்வு: ஐந்து கிராமங்களை தத்தெடுத்த ஐஐடி!

public

ரூர்க்கியைச் சேர்ந்த ஐஐடி உள்ளிட்ட பொறியியல் கல்வி நிறுவனங்கள் முதல் கட்டமாக ஐந்து கிராமங்களை தத்தெடுத்துக்கொண்டன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கிராமங்கள் அனைத்தும் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தடுப்பு கிராமங்களாக மாற்றப்படும்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உன்னத் பாரத் அபியனின் உதவியுடன், ரூர்க்கியை தளமாகக் கொண்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) மற்றும் பொறியியல் கல்லூரி (காயர்) ஆகியவை ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஐந்து கிராமங்களை கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக தத்தெடுத்து, ஏழை மக்களுக்கு உதவவுள்ளன. ரூர்க்கி சார்ந்த இந்த பொறியியல் நிறுவனங்கள் முதல் கட்டமாக ஐந்து கிராமங்களை தத்தெடுத்துக்கொண்டன. இவை கொரோனா வைரஸ் தடுப்பு கிராமங்களாக மாற்றப்படும்(model coronavirus preventive villages) என தெரிவிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற ஆசிரியர்களாலும் ஊழியர்களாலும் முகக்கவசங்கள், சுத்திகரிப்பான்கள், சோப்புகள் மற்றும் தனிப்பட்ட சுகாதார பராமரிப்பு குறித்த ஆலோசனைகள் கிராம மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஐந்து கிராமங்கள் பிரஹம்பூர், பஜுஹெடி, படேஹி ராஜ்புதானா, நர்சன் கலன் மற்றும் சலேம்பூர் ராஜ்புதானா ஆகியவை ஆகும்.

காயர் பொறியியல் கல்லூரித் தலைவர் யு சி ஜெயின் கூறும்போது, முழு மாநிலமும், தேசமும், உலகமும் கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தங்களால் இயன்ற எந்த வகையிலும் சமூகத்திற்கும் மக்களுக்கும் பங்களிப்பு செய்வது திறமையான நிறுவனங்களின் பொறுப்பாகும். நோயாளிகளுக்கும் கிராமப்புற மருத்துவ மையங்களுக்கும் இலவச மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. நாங்கள் அனைத்து கிராம குடும்பங்களின் விரிவான சார்ட்டையும் உருவாக்கியுள்ளோம். யாருக்காவது உணவு, ரேஷன் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் தேவை இருக்கிறதா என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறோம்” என்றார்.

ஐ.ஐ.டி வேளாண் துறை வல்லுநர்களால் விவசாயிகளுக்கு அதிகபட்ச உற்பத்திக்கான வழிகள், சமூக விலகலை பராமரித்தல், விவசாய கருவிகளை சுத்தப்படுத்துதல் குறித்து இந்த நிறுவன ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர். ஐ.ஐ.டி.யின் கிராம வேளாண் வானிலை சேவைத் துறையும் வானிலை மேம்படுத்தல் தொடர்பாக விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மேலும், கொரோனா குறித்த ஆய்வாகவும் இந்த திட்டம் செயல்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *