சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய எழுத்தாளர்

public

சர்வதேச புகழ்பெற்ற இலக்கிய விருதான புக்கர் பரிசு, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அல்லது மொழி பெயர்க்கப்பட்டு, பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

இந்த சர்வதேச விருதை இந்த வருடம் இந்திய பெண்மணியான இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ பெற்றுள்ளார். இவர் எழுதிய “ரெட் சமாதி” என்கிற இந்தி நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு “டோம்ப் ஆஃப் சாண்ட்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பிரபல மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல்லால் என்பவர் ரெட் சமாதி என்கிற இந்தி நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்த புத்தகத்துக்கு தான் தற்போது கீதாஞ்சலி ஸ்ரீக்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும், புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய எழுத்தாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த நாவல் இந்திய பிரிவினையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. 80 வயதான பெண் தன் கணவர் இறந்த பின்பும் வாழ்ந்து எதிர்கொள்ளும் சம்பவங்களை, ஒரு குடும்ப கதை வடிவில் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ. இந்த சர்வதேச புக்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய புத்தகம் இதுவாகும். இந்த புத்தகத்திற்கு 50,000 பவுண்ட் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது, இந்திய மதிப்பில் சுமார் 49 லட்சமாகும். இந்த பரிசுத்தொகை எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும்.

இதுகுறித்து விருந்து வென்ற எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ பேசுகையில், “நான் தனிமையிலும் அமைதியிலும் வாழும் எழுத்தாளர். எனக்கு புக்கர் கிடைத்திருப்பது பெரிய அங்கீகாரம். புக்கர் பரிசு தேர்வுக்கு எனது புத்தகம் அனுப்பி வைக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, நான் அதை வெல்வேன் என்றும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த சமயத்தில் நான் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், பணிவாகவும் உணர்கிறேன். எனக்கும் இந்தப் புத்தகத்துக்கும் பின்னால், இந்தி மற்றும் பிற தெற்காசிய மொழிகளின் வளமான மற்றும் செழிப்பான இலக்கிய பாரம்பரிய தொடர்புள்ளது.” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *