மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 ஜன 2018

ஒரு வாக்கைக் கூட வாங்க முடியாது!

ஒரு வாக்கைக்  கூட வாங்க முடியாது!

அதிமுகவின் வாக்கு வங்கியிலிருந்து ஒரு ஓட்டைக் கூட ரஜினியால் வாங்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று ரசிகர்களுடனான சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரபோவது உறுதி என்றும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது பேச்சில் கடந்த ஒரு வருடமாக தமிழக அரசியலில் நடைபெற்று வரும் சம்பவங்கள், மற்ற மாநிலங்களுக்கு முன்பு தமிழர்களை தலைகுனிய வைத்துவிட்டது.

ஒவ்வொரு மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த கட்சியினர் பல விதத்திலும் மக்களைக் கொள்ளையடித்துக் கொண்டுள்ளனர்" என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று( டிசம்பர் 31) சென்னை அரும்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குகுமாரிடம் இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "கட்சித் தொடங்குவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்திற்கு தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் வாழ்த்துக்கள். ரஜினியின் பேச்சை திசை திருப்ப வேண்டாம். ரஜினி தனது பேச்சில் அதிமுக என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. பொதுவாக சொன்ன கருத்து. அவர் திமுகவை கூட சொல்லி இருக்கலாம். அதிமுகவை சொல்லி இருந்தால் நாங்கள் பதில் தருவோம். பொதுவாக சொன்ன கருத்துக்கு நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 1 ஜன 2018