^வைரம் வெட்டும் தொழிலில் பின்னடைவு!

public

நீரவ் மோடியின் ஊழலைத்தொடர்ந்து இனி வரும் காலங்களில் வைரம் வெட்டுவது, வைரங்களை பாலிஷிங் செய்வது போன்ற தொழில்கள் பெல்ஜியம் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு மாறக்கூடும் என அச்சம் கொள்வதாக இந்திய வைர வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரவீன் சங்கர் பாண்டியா பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், ”நீரவ் மோடியின் ஊழல் இத்துறைக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சில வைர நகை தயாரிப்பாளர்கள் தங்கள் தொழிலை பெல்ஜியம் மற்றும் இஸ்ரேலுக்கு மாற்றிக்கொள்ள முயல்வதாகத் தெரிகிறது. இது இந்திய வைரத் தொழில் நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்த பதினைந்து நாட்களில் இந்திய நிதியமைச்சரை சந்திக்க உள்ளோம். அதற்குள் நீரவ் மோடி-மெகுல் ஷோக்சி குறித்த தெளிவான தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் வைர நகை பாலிஷ்களுக்கும், வைர நகை வெட்டும் தொழிலுக்கும் பிரசத்தி பெற்ற நாடாக விளங்கியது. ஆனால் 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பின் இந்தியா இத்தொழில்களில் சிறந்து விளங்கியதோடு, இத்தொழிலின் மையமாக இந்தியா உருவானது. குஜராத்தில் இருக்கும் சூரத்தில் தான் உலகளவில் அதிக வைர நகைகள் வெட்டப்பட்டு பாலிஷ் செய்யப்படுகிறது. உலகின் 85 சதவிகித வைரங்கள் சூரத் நகரில் இருந்து ஏற்றுமதி ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *