=விவேகம்: கேரளா அப்டேட்!

public

‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து கேரளாவில் அதிகத் திரையரங்குகள், அதிகக் காட்சிகள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது ‘விவேகம்’ திரைப்படம்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘விவேகம்’ பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (ஆகஸ்ட் 24) வெளியானது. அதிகாலைக் காட்சியிலிருந்தே தமிழக திரையரங்குகளில் அஜித் ரசிகர்களின் கூட்டம் அலைமோதிவருகிறது. தமிழகத்தில் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் விவேகம் இன்று வெளியாகியுள்ளது. பெரும் விலை கொடுத்து உரிமையைக் கைப்பற்றியுள்ளதால், அதிகமான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடும் முயற்சியை விநியோகஸ்தர்கள் மேற்கொண்டார்கள்.

கேரளாவில் முதல் நாளில் மட்டும் சுமார் 309 திரையரங்குகளில் சுமார் 1650 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. காஜல் அகர்வால், விவேக் ஓபராய், கருணாகரன், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *