]ராணி முகர்ஜி: கமல் உணர்த்திய பாடம்!

public

“நடிப்புக்கு மேக்கப் அவசியம் இல்லை என உணரவைத்தவர் கமல் ஹாசன்” என்று நடிகை ராணி முகர்ஜி கூறியுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் இயக்கி நடித்த ‘ஹேராம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர், பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி. இவர், ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்மோர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதில் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதுடன், திரைத்துறையில் சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காகச் சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் அவர் பேசும் போது, “என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் கமல் ஹாசனின் ‘ஹே ராம்’. இந்தப் படத்தில் நடிக்கும்போது, வழக்கம்போல மேக்கப்புடன் சென்றேன். படப்பிடிப்பு தளத்தில் என்னைப் பார்த்த கமல் ஹாசன், முகத்தைக் கழுவிவிட்டு வாருங்கள் என்றார். நான் என்னுடைய அறைக்குச் சென்று மேக்கப்பை நீக்கிவிட்டு வந்தேன். அப்போது பார்த்த அவர், மேக்கப்பை முழுமையாக நீக்கிவிட்டு வாருங்கள் என்றார். மேக்கப் இல்லாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டது அதுதான் முதல் முறை. அவருடன் நடிக்கும்போதுதான் நடிப்பு என்றால் என்னவென்று உணர்ந்தேன். நடிப்புக்கு மேக்கப் அவசியம் இல்லையென்று என்னை உணரவைத்தார் கமல் ஹாசன்” என்று தெரிவித்தார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *